ஒரே வருடத்தில் மூன்று விஜய் படங்கள் ரிலீஸா?

  • IndiaGlitz, [Thursday,March 11 2021]

தளபதி விஜய் நடித்த திரைப்படம் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியாகாத நிலையில் இந்த ஆண்டு அவர் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டானது. மேலும் அவர் நடிக்கயிருக்கும் ’தளபதி 65’ திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு ’தளபதி 65’ படம் மட்டுமன்றி மேலும் இரண்டு படங்கள் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாகவும் அடுத்த ஆண்டு விஜய்க்கு 3 படங்கள் ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது.

’தளபதி 65’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அதனை அடுத்து ’தளபதி 66’ திரைப்படம் கோடை விடுமுறையிலும், ‘தளபதி 67’ திரைப்படம் தீபாவளிக்கும் ரிலீசாகும் என்றும் இந்த இரண்டு திரைப்படங்களையும் இரண்டு மிகப்பெரிய நிறுவனங்கள் தயாரிக்க இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

நீண்ட இடைவெளிக்கு பின் தளபதி விஜய் நடிக்கும் திரைப்படம் ஒரே ஆண்டில் 3 படம் வெளியாகும் வாய்ப்பு இருப்பதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன்னர் கடந்த 2004 ஆம் ஆண்டு உதயா, கில்லி, மற்றும் மதுர ஆகிய மூன்று தடை திரைப்படங்கள் ஒரே ஆண்டில் ரிலீஸ் ஆன நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அடுத்த ஆண்டு தளபதியின் 3 படங்கள் ரிலீஸ் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'தளபதி 65' படத்திற்காக இத்தனை நாள் கால்ஷீட் கொடுத்தாரா பூஜா ஹெக்டே?

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கவுள்ள 'தளபதி 65' திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே

தேர்தல் துளிகள்: 11 மார்ச் 2021

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆட்சியில் இருந்துவந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இறுதி நேரத்தில் கலைக்கப்பட்டது.

குவிந்து கிடக்கும் தங்கம்… குஷியில் கூட்டம் கூட்டமாக அள்ளிச் செல்லும் மக்கள்… அதிர்ச்சி வீடியோ!

தங்கத்தின் விலை உச்சியைத் தொட்டு இருக்கும்போது, ஒரு மலை முழுக்க தங்கம் கொட்டிக் கிடக்கிறது

'திரெளபதி முத்தம் தட்டான் தட்டான்': 'கர்ணன்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கர்ணன்'. இந்த படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருக்கும்

மனைவி, மூன்று குழந்தைகளுடன் செல்வராகவன்: வைரல் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன் என்பதும் அவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதும் தெரிந்ததே.