முதல் முறை கேட்கும்போதே ஆட்டம் போட வைக்கும் பாடல்.. 'தக்லைஃப்' சிங்கிள் ரிலீஸ்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த படம் ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் தொடங்கிவிட்டதை குறிக்கும் வகையில், இன்று சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. "ஜிங்குச்சா" என்று தொடங்கும் இந்த பாடல், முதல் முறை கேட்கும்போதே ஆட்டம் போட வைக்கிறது என்றும் கூறப்படுகிறது.
இந்த பாடலின் வீடியோவை பார்க்கும் போது, இது ஒரு திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளில் நடைபெறும் பாடல் போல் இருக்கிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த இந்த பாடல் வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார் என்பதும், வைசாலி சமந்த், சக்திஸ்ரீ கோபாலன் மற்றும் ஆதித்யா ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலில் கமல்ஹாசன், திரிஷா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர் என்பதும், நாசர், அபிராமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த பாடலில் அட்டகாசமாக நடனமாடியுள்ளனர்.
குறிப்பாக, கடைசி சில நிமிடங்களில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு இணைந்து ஆடும் அட்டகாசமான நடன காட்சியை பார்க்கும் போது, நிச்சயம் இந்த பாடல் திரையில் தோன்றும் போது பார்வையாளர்களை எழுந்து ஆடவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com