ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஜிங்குச்சா' பாடல்.. 'தக்ஃலைப்' சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘தக்ஃலைப்’ படத்தில் இடம்பெற்ற ஜிங்குச்சா என்ற பாடல் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்த ‘நாயகன்’ படத்திற்கு பிறகு, நீண்ட இடைவெளிக்கு பின்னர் அதே கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘தக்ஃலைப்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படம் ஜூன் 5-ம் தேதி ரிலீஸ் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இடம்பெற்ற ஜிங்குச்சா என்ற சிங்கிள் பாடல் ஏப்ரல் 18ஆம் தேதி வெளியாகும் என்று சிம்பு தனது சமூக வலை தளத்தில் அறிவித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் உருவான இந்த பாடல், நிச்சயம் உலகம் முழுவதும் இசை ரசிகர்களை ஆட வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இந்த பாடலை தொடர்ந்து அடுத்தடுத்து இந்த படத்தின் ஆச்சரியமான அறிவிப்புகள் வெளியாகும் என்றும், விரைவில் டீசர் மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து அறிவிப்பும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
One BEAT
— Silambarasan TR (@SilambarasanTR_) April 16, 2025
Two THUGS#ThugLife brings the real anthem
A #ManiRatnam Film
An @arrahman Musical
Thuglife first single #Jinguchaa releasing on April 18 #JinguchaaApril18 #Jinguchaafirstsingle #ThuglifeFromJune5 #KamalHaasan… pic.twitter.com/HxtKQwqrF8
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com