என்ன வேணும் உனக்கு.. கொட்டி கொட்டி கிடக்கு: 'தக்லைஃப்' சுகர் பேபி பாடல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக்லைஃப்’ திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று மாலை சுகர் பேபி என்ற பாடல் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் சற்று முன் இந்த பாடல் வெளியாகி உள்ளது.
தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள இந்த பாடல் பாடலில் த்ரிஷா, கமல்ஹாசன், சிம்புவின் காட்சிகள் இருப்பதை பார்க்க முடிகிறது.
ஏ ஆர் ரஹ்மான் கம்போஸ் செய்த இந்த பாடலை சிவா ஆனந்த் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் பாடியிருக்க ராப் பகுதியை அலெக்சாண்டர், சுபா, சரத் சந்தோஷ் பாடியுள்ளனர். இந்த பாடல் முதல் முறை கேட்கும் போதே அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பாடலின் அசத்தலான வரிகள் இதோ:
என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்குது
இன்னும் என்ன வேணும் உனக்கு
சொர்கம் இங்கு இருக்கு
கள்ளம் உள்ள நெஞ்சு
காதலென்ற நஞ்சு
கண்ணை மூடி கொண்டு
என்னை மட்டும் கொஞ்சு
என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்கு
இன்னும் என்ன வேணும் உனக்கு
சொர்கம் இங்க இருக்கு
Sugar baby என்
Sugar baby
Sugar baby என்
Sugar baby
அணைக்க வா
அணைக்க வா
என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்கு
கலியுகம் இது
கடல் எறியுது
பகை நெருங்குது
படை கொண்டு வா.. வா
வருது புலி
விலகுது நதி
அடி அதிரடி
எதிரிகள் பலி
வாள் நீளம் வேதம் ஓதுது
வீசும் காற்றுல வேஷம் மாறுது
இந்த பொல்லாத ஊரு வேண்டாமடி
நீ வந்தா சரி..
என் உலகே நீயடி..
If love is a crime, my daddy is criminal.
criminal criminal criminal criminal.
I pay the fine to the time,
without mining him cynical.
cynical cynical cynical.
If being rich is a sin,
I wanna be a sinner sinner sinner sinner.
Now I am married to the game.
I am gonna be the winner winner winner winner.
என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்குது
இன்னும் என்ன வேணும் உனக்கு
சொர்கம் இங்கு இருக்கு
Sugar baby என்
Sugar baby
Sugar baby என்
Sugar baby (2)
என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்குது
இன்னும் என்ன வேணும் உனக்கு
கொட்டி கொட்டி கிடக்குது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments