'வாரிசு' வசூல் தகவல்களுக்கு பதிலடி கொடுத்த 'துணிவு' விநியோகிஸ்தர்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,January 24 2023]

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ மற்றும் தல அஜித் நடித்த ‘துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியானது என்பதும் இந்த இரண்டு திரைப்படங்களுமே நல்ல வசூலை வாரி வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வாரிசு’ படத்தின் வசூல் நிலவரங்களை அவ்வப்போது அந்த படத்தின் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வந்த நிலையில் ‘துணிவு’ படக்குழுவினர் எந்தவித வசூல் தகவலையும் அறிவிக்கவில்லை.

குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ’வாரிசு’ படம் ரூபாய் 250 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த தகவலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

இந்த நிலையில் ‘துணிவு’ படத்தின் விநியோகிஸ்தர்களில் ஒருவரான ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் 'இந்த ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் திரைப்படம் ‘துணிவு’ என்று பதிவு செய்து ’வாரிசு’ பட வசூல் தகவல்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் ‘துணிவு’ படத்தின் கிளிப்பிங்ஸ் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இருப்பினும் ‘துணிவு’ படத்தின் வசூல் எவ்வளவு என்பதை குறித்த தகவல்களை இன்னும் அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சினேகாவின் குட்டிப்பாப்பாவுக்கு பிறந்த நாள்.. க்யூட் புகைப்படங்கள்!

தமிழ் திரை உலகின் புன்னகை அரசியான சினேகாவின் மகள் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ள நிலையில் பிறந்தநாள் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

எஸ்.எஸ்.ராஜமெளலியை கொலை செய்ய திரையுலகில் திட்டமா? பிரபல இயக்குனரின் அதிர்ச்சி பதிவு!

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியை  கொலை செய்ய திரை உலகில் ஒரு குரூப் திட்டமிட்டுள்ளதாக பிரபல இயக்குனர் ஒருவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிம்பு வீட்டுக்கு புதியதாக வந்த தேவதை... ரசிகர்கள் கொண்டாட்டம்!

சிம்புவின் வீட்டிற்கு புதிதாக தேவதை வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்

எம்ஜிஆர் உருவத்தை பச்சை குத்தி கொண்டாரா விஷால்? என்ன காரணம்?

மக்கள் திலகம் எம்ஜிஆர் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்றளவும் பல அரசியல் கட்சிகள் அவரது பெயரைச் சொல்லி தான் ஓட்டு வாங்கி வருகின்றன. எம்ஜிஆரின் பிறந்தநாளை பொதுமக்கள்

சிறப்பு தோற்றத்தில் கமல், ஜீவா நடிக்கும் படம்.. ஹீரோ யார் தெரியுமா?

பிரபல நடிகர் நடித்து வரும் திரைப்படத்தில் கமலஹாசன் மற்றும் ஜீவா ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.