காசே தான் கடவுளடா அந்த கடவுளும் என்ன படுத்துடுடா? 'துணிவு' சிங்கிள் பாடல்

அஜித் நடித்த 'துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன என்பதும் ஏற்கனவே ’சில்லா சில்லா’ என்ற பாடல் வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் இன்று ’காசேதான் கடவுளடா’ என்ற பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான இந்த பாடல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. வைசாக் எழுதியுள்ள இந்த பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த பாடலை வைசாக், மஞ்சுவாரியர் மற்றும் ஜிப்ரான் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலில் ஒவ்வொரு வரியையும் ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த பாடல் முதல் முறை கேட்கும்போதே ஆட்டம் போட வைக்கும் அளவுக்கு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘சில்லா சில்லா’ பாடல் போலவே இந்த பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும் என்பது முதல் முறை கேட்கும்போதே உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த பாடலின் சில வரிகள் இதோ:

பொறக்குற நொடியில விரட்டுது காசு
இருக்குற நிம்மதிய பண்ணிடுது குளோஸ்
Money in the bank, bank is the boss
தேடித்தேடி ஓடி ஆனதெல்லாம் லாஸ்
கனவுல தான் காட்டணும் கணக்கு
அளவுக்கு மீறின ஆசை எதுக்கு?
சுவிஸ்ல இருக்கு காந்திக்கும் கணக்கு
ஏகப்பட்ட இஎம்.ஐயில நாடே இருக்கு
காசே தான் கடவுளடா அந்த கடவுளும் என்ன படுத்துடுடா?

More News

பிப்ரவரியில் வெளியாகும் ஷங்கரின் அடுத்த படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன்2 'மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா நடித்து வரும் 'ஆர்சி 15' ஆகிய இரண்டு படங்களை இயக்கி

படப்பிடிப்பு முடிந்ததும் கெட்டப் மாறிய ஆர்ஜே பாலாஜி: புகைப்படம் வைரல்

நடிகர் ஆர்ஜே பாலாஜி தான் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து புதிய கெட்டப்புக்கு மாறியுள்ளார். இந்த புதிய கெட்டப் வைரலாகி வருகிறது.

'வாரிசு' படத்தை தான் முதலில் பார்ப்பேன்.. எச்.வினோத் கூறிய ஆச்சரியமான காரணம்!

விஜய் நடித்த 'வாரிசு' மற்றும் அஜித் நடித்த 'துணிவு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் விருந்தாக ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சொர்க்கத்தில் இருக்கும் மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பாடகி சித்ரா.. நெகிழ்ச்சியான பதிவு!

 பிரபல பின்னணி பாடகி சித்ரா, சொர்க்கத்தில் இருக்கும் தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவு செய்த இன்ஸ்டகிரம் போஸ்ட் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் கலைகின்றன' படத்தில் இணைந்த சூப்பர்ஹிட் பட நடிகை!

பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் யோகிபாபு