விக்ரம் பிரபுவின் 'துப்பாக்கி முனை' டீசர் விமர்சனம்

  • IndiaGlitz, [Monday,September 17 2018]

விக்ரம்பிரபு நடிப்பில் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'துப்பாக்கி முனை' திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

அதிரடி ஆக்சன் படமான இந்த படத்தில் விக்ரம்பிரபு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்துள்ளார். நாம் சாப்பிடும் ஒவ்வொரு அரிசியிலும் நம்முடைய பெயர் இருக்கின்றது என்பது உண்மையானால், என் துப்பாக்கியில் உள்ள ஒவ்வொரு தோட்டாவிலும் குற்றவாளிகளின் ஜாதகம் இருக்கும் என்பது என் நம்பிக்கை என்ற வசனத்துடன் டீசர் தொடங்குகிறது.



ஆக்சன், கார் சேஸிங் குறிப்பாக ஒரு காரை சுற்றி வரும் பத்து கார்கள் என ஆக்சன் பிரியர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் டீசரின் காட்சிகள் உள்ளது. ராசமதியின் கேமிரா, புவன் ஸ்ரீனிவாசனின் எடிட்டிங் குறிப்பாஅக அன்பறிவ் சண்டைக்காட்சிகள் டீசரில் அட்டகாசமாக உள்ளது. அதேபோல் ஒரு ஆக்சன் படத்துக்குரிய முத்துகணேஷின் பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது. கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஆக்சன் பிரியர்களுக்கான விருந்து என்பது டீசரில் இருந்தே தெரிகிறது.


இந்த படத்தின் டீசரை பார்த்த பிரபல இயக்குனர் மணிரத்னம், படக்குழுவினர்களை பாராட்டியது, படக்குழுவினர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜார்ஜியாவில் சிம்புவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு

மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்து முடித்துவிட்ட நடிகர் சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்திலும், வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மாநாடு' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

ரசிகர்களுக்கு உத்தரவாதம் கொடுக்கும் 'நித்யா நந்தா' படக்குழுவினர்

'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தின் வெற்றி கூட்டணியான ஜிவி பிரகாஷ்-ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் 'காதலை தேடி நித்யா நந்தா' என்ற படத்தின் மூலம் இணைகிறது

யாஷிகாவை வச்சு செய்யும் விஜி-ரித்விகா

இதுவரை மற்றவர்களை பழிவாங்குவது போன்ற டாஸ்க் ஐஸ்வர்யாவுக்கும், யாஷிகாவிற்கும் தான் வந்துள்ளது.

செப்டம்பர் 19 முதல் 'சர்கார்' கொண்டாட்டம் ஆரம்பம்

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

பெட்ரோல் விலை ரூ.100ஆக உயர வாய்ப்பே இல்லை! ஏன் தெரியுமா?

கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை விஷம் போல் ஏறிக்கொண்டே போகிறது. ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை ஏறிக்கொண்டே இருக்கும்