close
Choose your channels

காதலியை கரம்பிடிக்கும் விஜய், அஜித், சூர்யா பட நடிகர்!

Tuesday, September 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய், அஜித், சூர்யாவுடன் நடித்த நடிகர் ஒருவர் தனது காதலியை கரம்பிடிக்க உள்ளார் என்றும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜய் நடித்த ’துப்பாக்கி’ படத்தில் வில்லனாகவும் அஜித் நடித்த ’பில்லா 2’ படத்தில் முக்கிய வேடத்திலும், ’அஞ்சான்’ படத்தில் சூர்யாவின் நண்பராகவும் நடித்திருந்தவர் பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால், இவர் பாலிவுட்டில் ஒருசில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வித்யூத் ஜமால் கடந்த சில ஆண்டுகளாக பேஷன் டிசைனர் நந்திதா மதானி என்பவரை காதலித்து வருகிறார். இந்த காதல் தற்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் இணைய உள்ளது. பிரபலங்களின் ஸ்டைலிஷாக பணியாற்றும் நந்திதா மதானி, விராட் கோலி உள்ளிட்ட பலருக்கு ஹேர்ஸ்டைலிஷ்டாக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் வித்யூத் ஜம்வால் மற்றும் நந்திதா மதானி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், தாஜ்மஹால் பின்னணியில் நடைபெற்ற இந்த திருமண நிச்சயதார்த்ததிற்கு நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. வித்யூத் ஜமால் மற்றும் நந்திதா விரைவில் திருமண தேதியை இணைந்தே வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.