இது முழுக்க முழுக்க பொய்யான தகவல்: 'தளபதி 65' குறித்து 'துப்பாக்கி' வில்லன் டுவீட்

  • IndiaGlitz, [Friday,April 02 2021]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 65’ படத்தில் தான் நடிப்பதாக வெளிவந்த தகவலுக்கு ’துப்பாக்கி’ வில்லன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கவிருக்கும் ’தளபதி 65’ படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது என்பதும் இந்த படத்தின் இரண்டு நாள் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில் இந்த படத்தில் வித்யுத் ஜம்வால் வில்லனாக நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் ஒரு கருத்து பரவி வருகிறது. ’துப்பாக்கி’ படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் மற்றும் வித்யூத் இணைய இருப்பதாக தகவல் வந்திருப்பதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய வித்யூத் ஜமால் ’இப்படி ஒரு செய்தி உண்மையானால் எனக்கு மகிழ்ச்சிதான். ’ஐ எம் வெயிட்டிங்’. ஆனால் இப்பொழுது வரை இந்த தகவல் முழுக்க முழுக்க பொய்யானது’ என்று கூறியுள்ளார்.


 

More News

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்': அட்டகாசமான மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'.

தன்னை வெறுக்கும் கூட்டத்திற்கு சீமான் நேரடி பதில்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி தொடர்ந்து தமிழக அரசியலில் செயல்பட்டு வரும் சீமானின் நிலைப்பாடு எப்போதும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் கோவை தொகுதியில் வெற்றிப்பெறுவாரா? கணிப்பைக் கூறும் பரபரப்பு வீடியோ!

வரும் சட்டமன்றத் தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவி வரும் சூழலில் முதல்முறையாக முதல்வர் வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

எல்லா கட்சியிலயும் என்னை உதைக்க தேடுறாங்க: கஸ்தூரி டுவீட்

எல்லா காட்சிகளையும் என்னை உதைக்க தேடுறாங்க என்றும் அதனால் தப்பை தட்டிக் கேட்டா நியாயமா நடக்கும் கட்சி எதுவோ அதில் சேர்ந்துட வேண்டியதுதான் என்றும் கஸ்தூரி டுவிட் ஒன்றை பதிவு செய்து இருப்பது

நன்றி மறக்காத நட்டி… பரிசாகப் பெற்ற காரை பயிற்சியாளருக்கு வழங்கி மீண்டும் அசத்தல்!

அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற 2020 ஐபிஎல் தொடர் போட்டியின்போது ஐத்ராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக பந்து வீசியவர் தமிழக வீரர் நடராஜன்.