close
Choose your channels

விஷாலின் 'துப்பறிவாளன்' சிங்கிள் டிராக் ரிலீஸ் தேதி

Saturday, August 26, 2017 • தமிழ் Comments

கோலிவுட் திரையுலகில் ஒரு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னர் டிரைலர் மட்டுமே வெளியாகி இருந்த நிலையில் தற்போது பர்ஸ்ட்லுக், மோஷன் போஸ்டர், டீசர், டிரைலர், உள்பட பல புரமோஷன்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக இசை வெளியீட்டுக்கு முன்னரே சிங்கிள் டிராக் வெளியிடும் கலாச்சாரமும் தொடங்கியுள்ளது. 

இந்த நிலையில் விஷால் நடித்து 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 29ஆம் தேதி இந்த படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

செப்டம்பரில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் விஷால், பிரசன்னா, வினய், சிம்ரன், தேவயானி, அனு இமானுவேல், ஆண்ட்ரியா உள்பட பலர் நடித்துள்ளனர். மிஷ்கின் இயக்கத்தில் அரோல் கரோலி இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz