'துப்பறிவாளன்' 2வது வார வசூல் எப்படி?

  • IndiaGlitz, [Monday,September 25 2017]

விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' திரைப்படத்தின் ஓப்பனிங் வசூல் மற்றும் முதல் வார இறுதி வசூல் அபாரமாக இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சென்னையில் இந்த படத்தின் 2வது வார இறுதி வசூல் நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்

கடந்த வார இறுதி நாட்களில் இந்த படம் சென்னையில் 16 திரையரங்குகளில் 167 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.61,76,265 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 85% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் சென்னையில் ரிலீஸ் தினமான கடந்த 14ஆம் தேதியில் இருந்து 24ஆம் தேதி வரை ரூ.2,86,96,542 வசூல் செய்துள்ளது. விஷால் படங்களில் சென்னையில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை 'துப்பறிவாளன்' பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

முருகதாஸ் அவர்களுக்கு முத்தான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பாரதிராஜா, பாலசந்தர், பாக்யராஜ் ஆகிய இயக்குனர்களுக்கு பின்னர் அதிக இயக்குனர்களை உருவாக்கிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் என்று கூறினால் அது மிகையாகாது

தூங்கும் அரசு, செவிடர் காதில் ஊதிய சங்கு: கமல்ஹாசனின் காட்டமான டுவீட்டுக்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் அவருடைய கருத்துக்களும் முன்பை விட தற்போது கொஞ்சம் காட்டமாகவே வெளிப்பட்டு வருகிறது

ராம்கியின் ரீஎண்ட்ரி 'இங்கிலீஷ் படம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த 1990களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த நடிகர் ராம்கி நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நாயகனாக ரீஎண்ட்ரி ஆகியுள்ள படம் 'இங்கிலீஷ் படம்.

கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜூக்கு விஷால் செய்த கெளரவம்

மிதாலிராஜ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டி வரை சென்று நூலிழையில் கோப்பையை இழந்தது.

இனிமேல் அரசியலுக்கு வரும் நடிகர்கள் தோல்வியடைவார்கள்: திருமுருகன் காந்தி

கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், விஷால் உள்பட திரைநட்சத்திரங்கள் பலர் மிக விரைவில் அரசியல் களம் புகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் கமல்ஹாசன் முந்திவிடுவார் என்றே கணிக்கப்பட்டுள்ளது.