'டிக்கெட் டு ஃபினாலே' அடுத்த டாஸ்க்.. எலிமினேட்டர் ஆனவர்கள் யார் யார்?

  • IndiaGlitz, [Wednesday,December 27 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க் நடந்து வரும் நிலையில் அதன் அடுத்த கட்ட டாஸ்க் குறித்த புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

புதிய டாஸ்க்கில் தினேஷ், மணி, பூர்ணிமா, விஷ்ணு, மாயா, ரவீனா, விசித்ரா மற்றும் நிக்சன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அர்ச்சனா மற்றும் விஜய் வர்மா நடுவர்களாக இருக்கும் இந்த முயல்மேக்ஸ் டாஸ்க்கில் கொடுக்கப்பட்டு இருக்கும் குறிப்புகளின் படி கிரேடுகளில் முன்னேறி முயலை அடைய வேண்டும்.

இதனை அடுத்து ஒவ்வொருவருக்கும் ஒரு கார்டு கொடுக்கப்படும் நிலையில் முதல் கட்டமாக ரவீனா எலிமினேட் செய்யப்படுகிறார். இதையடுத்து விஷ்ணு, மணி ஆகிய இருவரும் எலிமினேட் செய்யப்படுகின்றனர். எனவே களத்தில் விசித்ரா, நிக்சன், பூர்ணிமா, தினேஷ், மாயா இருக்கும் நிலையில் தினேஷ் வெளியேற அதனையடுத்து மாயா வெளியேறுவதுடன் இன்றைய புரமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.

’டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க்கில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லலாம் என்பதால் அனைத்து போட்டியாளர்கள் தீவிரமாக விளையாடி வரும் நிலையில், இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது யார் என்பது இந்த வாரத்துக்குள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அர்ச்சனா, மாயா, விசித்ரா, நிக்சன்

More News

முயலை தூன்னு துப்பி கொடுத்த பூர்ணிமா.. இதையாவது கேட்பாரா கமல்?

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பூர்ணிமா, மணியிடம்  முயலை கொடுக்கும்போது அதை தூன்னு துப்பி கொடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அவருக்கு பார்வையாளர்கள்

ஹலோ.. செக்.. செக்.. விஜய் ஆண்டனியின் 'ஹிட்லர்' டீசர்..!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான 'ஹிட்லர்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர்

தம்பி நிக்ஸனுடன் நெருக்கமாக நடனம் பழகும் பூர்ணிமா..!

தம்பி நிக்ஸனுடன் நெருக்கமாக நடனம் பழகும் பூர்ணிமா..!பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்னும் இரண்டு

ரோஜாவுக்கு கிரிக்கெட் விளையாட சொல்லி கொடுத்த முதலமைச்சர்.. முதல் பந்திலேயே சிக்சர்...!

நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவுக்கு அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

இளைஞர்களாக மாறிய சிம்ரனின் சிங்கக்குட்டிகள்.. வைரல் குடும்ப புகைப்படம்..!

நடிகை சிம்ரன் தனது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தில்