close
Choose your channels

இரண்டாவது வாரத்திலும் களைகட்டிய 'டிக் டிக் டிக்' வசூல்

Monday, July 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இரண்டாவது வாரத்திலும் களைகட்டிய டிக் டிக் டிக் வசூல்

ஜெயம் ரவி நடிப்பில் சக்தி செள்நதிரராஜன் இயக்கத்தில் டி.இமான் இசையில் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியான இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமான 'டிக் டிக் டிக்' அனைத்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகளின் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றது.

இந்த படம் கடந்த வெள்ளியன்று வெளியான படங்களை விட வாரயிறுதி நாட்களில் அதிக வசூலை பெற்றுள்ளது. கடந்த வாரயிறுதி நாட்களில் இந்த படம் 22 திரையரங்க வளாகங்களில் 232 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,00,76,219 வசூலை பெற்றுள்ளது. மேலும் இரண்டாவது வாரத்திலும் திரையரங்குகளில் 85% பார்வையாளர்கள் இருந்ததே இந்த படத்தின் வெற்றிக்கு சான்றாக உள்ளது

மேலும் இந்த படம் வெளியான ஜூன் 22 முதல் நேற்று வரை சென்னையில் மட்டும் ரூ.3,65,89,153  வசூல் செய்து இரண்டாவது வாரத்திலும் வசூலில் களைகட்டியுள்ளது என்பதும், இந்த படம் ஜெயம் ரவியின் படங்களில் அதிகபட்ச ஓப்பனிங் வசூல் கொடுத்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.