நீதிமன்ற உத்தரவு எதிரொலி: டிக்டாக் செயலியை முடக்கியது கூகுள் பிளேஸ்டோர்

  • IndiaGlitz, [Wednesday,April 17 2019]

டிக்டாக்’ செயலியில் பதிவு செய்யப்பட்டும் வீடியோக்களால் கலாசாரம் இழிவுபடுத்தப்படுவதாகவும், இதில் உள்ள வீடியோக்கள் ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இருப்பதாலும் இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்ற குரல் ஒலித்து வந்தது

இதுகுறித்த வழக்கு ஒன்று மதுரை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையில் ‘டிக்டாக்’ செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பின்பற்றுமாறு கூகுள் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது

இந்த நிலையில் டிக் டாக் செயலியை இந்தியாவில் கூகுள் நிறுவனம் முடக்கியுள்ளது. இதனையடுத்து கூகுள் பிளேஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலியை இந்தியாவில் இனி யாரும் தரவிறக்கம் செய்ய முடியாது. எனினும், ஆப்பிள் தளங்களில் டிக் டாக் செயலி இன்னும் உள்ளது. இந்த செயலியை நீக்குவது குறித்து ஆப்பிள் நிறுவனம் கருத்து கூற மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 

More News

நயன்தாராவின் 'கொலையுதிர்க்காலம்' சென்சார் தகவல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து வந்த 'கொலையுதிர்க்காலம்' திரைப்படம் நீண்ட காலதாமதத்துடன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில்

ரஜினியின் 'தர்பார்' பட வில்லன் குறித்த தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயகக்த்தில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

தள்ளி போகிறதா Mr.லோக்கல் ரிலீஸ்?

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கிய Mr.லோக்கல் திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது

30 வருடத்திற்கு ஒரு முறை நிகழும் அதிசயம்! முட்டையிடும் குன்று: விடை தெரியாமல் திணறும் ஆராய்ச்சியாளர்கள்!

இயக்கையால் நிகழ்த்தப்படும் அதிசய மற்றும் ஆச்சர்ய நிகழ்வுகளுக்கு, பல்வேறு...  தொழில் நுட்பங்கள் கண்டு பிடிக்கப்பட்ட போதிலும், விடை தெரிந்து கொள்ள முடியவதில்லை...

பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட இளம்பெண்ணுக்கு அதிரடி சிறை தண்டனை!!

எகிப்தில் நடந்த பிரமாண்ட பார்ட்டியில் ஆபாச நடனமாடிய பெண்ணுக்கு அந்நாட்டு அரசு சிறை தண்டனை வழங்கியுள்ளது.