டிக் டாக் தடையால் மனநிலை பாதிப்படைந்த பிரபலம்: பிரதமர் மோடிக்கு வேண்டுகோள்

இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே சமீபத்தில் கால்வான் பள்ளத்தாக்கின் ஏற்பட்ட மோதல் காரணமாக சீனாவின் 59 செயலிகள் சமீபத்தில் தடை செய்யப்பட்டது. அதில் முக்கியமாக ஹலோ மற்றும் டிக் டாக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டிக்டாக் திடீரென தடை செய்யப்பட்டால் அதில் பிரபலமாக இருந்த பலர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் டிக்டாக்கில் பல வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாக இருப்பவர் ஜிபி முத்து/ இவர் தனது வீடியோவை பிறரிடம் திட்டு வாங்குவதற்காகவே வெளியிட்டு வருவார். இவரது வீடியோவை பார்த்து இவரை டிக் டாக் பயனாளிகள் திட்டுவதும், பயனாளிகளை இவர் திட்டுவதும்தான் இவரது வீடியோவில் உள்ள ஸ்பெஷல்.

இந்த நிலையில் டிக் டாக் தடை காரணமாக ஜிபி முத்து தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் டிக்டாக் தடை காரணமாக தனக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் நெஞ்சு வலிப்பதாகவும் கூறியுள்ளார். டிக்டாக் போன்று மற்ற செயலிகளை தான் பயன்படுத்தியதாகவும் ஆனால் டிக் டாக் போன்று இல்லை என்றும், எனவே தனக்கு கண்டிப்பாக டிக்டாக் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்திய பிரதமர் மோடி அவர்களே தயவு செய்து விட்டு டிக்டாக் தடையை எடுத்துவிட்டு, டிக்டாக்கை ஓபன் பண்ணி விடுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். டிக்டாக்கால் மனம் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி இருக்கும் இவரது இந்த வீடியோவுக்கும் வழக்கம்போல் பயனாளிகள் திட்டி வருகின்றனர்.

More News

சுஷாந்தின் பெண் மேனேஜர் வயிற்றில் பிரபல நடிகரின் குழந்தையா? அதிர்ச்சி தகவல்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி பாலிவுட் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனுஷின் சூப்பர்ஹிட் பட இயக்குனரின் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்

தனுஷ், அமலாபால் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'வேலையில்லா பட்டதாரி'. இந்தப் படம் மிகப் பெரிய அளவில் சூப்பர் ஹிட் ஆனது என்பதும்

என் உயிருக்கு ஆபத்து: விஷாலின் பெண் கணக்காளர் குற்றச்சாட்டு!

நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி என்ற நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்த பெண் ரம்யா என்பவர் 45 லட்சம் ரூபாய் வரை பணத்தை கையாடல் செய்துவிட்டதாக

மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் ஏற்கனவே  ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு, செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக

சாத்தான்குளம் சம்பவம் எதிரொலி: பிரெண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை

சாத்தான்குளம் செல்போன் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய  இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற காவல்துறை அதிகாரிகள்