close
Choose your channels

'நேத்து ராத்திரி யம்மா' பாடலுக்கு டிக்டாக் இலக்கியாவின் கிளாமர் டான்ஸ்:வைரல் வீடியோ

Saturday, April 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டிக்டாக் மூலம் பிரபலமான இலக்கியா, ‘நீ சுடத்தான் வந்தியா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் முழுக்க முழுக்க கவர்ச்சி அம்சம் கொண்ட இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடிய வீடியோ ஒன்றை இலக்கியா வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது. இதனை அடுத்து தற்போது அவர் ’சகலகலா வல்லவன்’ படத்தில் இடம்பெற்ற ’நேத்து ராத்திரி யம்மா’ என்ற பாடலுக்கு வழக்கம்போல் தனது கிளாமர் அசைவுகளுடன் கூடிய நடனத்தை ஆடி உள்ளார். இந்த நடனத்திற்கு ரசிகர்களின் பாராட்டு ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம் நெட்டிசன்கள் கிழி கிழி என்று கிழித்து வருகின்றனர்.

ஒரே மாதிரியாக கவர்ச்சியை மட்டுமே நம்பி நான் திரையுலகில் ஜொலிக்க முடியாது என்றும் கொஞ்சம் நடிப்பையும் கற்றுக் கொண்டு வாருங்கள் என்றும் அவர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகிறார்கள். இருப்பினும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.