டிக்டாக் புகழ் ரெளடிபேபி சூர்யா தற்கொலை முயற்சி: திடுக்கிடும் தகவல்

டிக் டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா இன்று காலை தனது வீட்டில் தற்கொலை முயற்சி செய்ததாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருப்பூர் பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் டிக்டாக்கில் ரெளடிபேபி சூர்யா என்ற பெயரில் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். இவருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் டிக்டாக்கில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் சிங்கப்பூரிலிருந்து திரும்பிய சூர்யாவுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் ஏசி அறையிலேயே தான் இருந்து பழக்கப்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்யும் அறையில் ஏசி வேண்டும் என்றும் தனிமைப்படுத்தப்பட்டால் தனக்கு தனி அறை வேண்டும் என்று அடம்பிடித்தார். இதனையடுத்து அவரை சமாதானம் செய்து சுகாதாரத்துறையினர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்

இந்த நிலையில் திடீரென இன்று காலை ரெளடிபேபி சூர்யா தனது தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் டிக் டாக் சூர்யாவை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்

முன்னதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிருபருக்கு ரெளடிபேபி சூர்யா கொலை மிரட்டல் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டதாகவும் இதனை அடுத்து அந்த நிருபர் போலீசில் புகார் கொடுத்ததால் மன உளைச்சலில் டிக் டாக் சூர்யா இருந்ததாகவும் கூறப்படுகிறது

More News

தந்தையர் தினத்தில் தமன்னா வெளியிட்ட தரமான வீடியோ!

ஜூன் 21-ஆம் தேதி ஆகிய நேற்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைத்தளத்தில் தந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள்

கொரோனா வதந்திக்கு க்யூட்டான வீடியோ மூலம் பதிலளித்த நயன்தாரா-விக்னேஷ் சிவன்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் தனிமைப்பட்டுள்ளதாக நேற்று ஒரு சில ஊடகங்களில் வதந்திகள் வெளியாகின.

கொளுத்துங்கடா: நள்ளிரவு 12 மணிக்கு வெளியான 'மாஸ்டர்' போஸ்டர்

தளபதி விஜய்யின் பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகம் முழுவதும் தளபதி விஜய்யின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

சீனாவை திட்டியது போதும்... வுஹானுக்கு முன்பே கொரோனா வைரஸ் இந்த நாட்டிலும் இருந்தது: கொளுத்திப் போட்ட புதுத்தகவல்!!!

சீனாவின் வுஹான் நகரத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் அனைத்து மூலை முடுக்குகளில்

வந்துவிட்டது கொரோனாவுக்கு புதிய சிகிச்சை மருந்து: இந்திய மருந்து நிறுவனம் சாதனை!!!

கொரோனா சிகிச்சைக்கு இந்தியாவில் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட மருந்து எதுவும் அறிவிக்கப் படாமல் இருந்தது. இந்நிலையில் கிளென்மார்க் என்ற நிறுவனம் கொரோனாவின்