கிருமி நாசினி சுரங்கம் கட்டிய கலெக்டர்: குவியும் பாராட்டுக்கள்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மக்கள் வெளியே வந்து கொண்டுதானிருக்கின்றனர். இதனால் கொரோனா வைரஸை முழு அளவில் இந்தியாவில் கட்டுப்படுத்த முடியுமா? என்பது சந்தேகமே

இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஒரு புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளார். இதன்படி தனியார் நிறுவனம் ஒன்றின் துணையோடு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பாளையம் என்ற பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் கிருமி நாசினி சுரங்கம் ஒன்றை அமைக்கப்பட்டுள்ளது. காய்கறி மார்க்கெட்டுக்கு செல்லும் முன், மக்கள் மூன்று முதல் ஐந்து வினாடிகள் இந்த கிருமி நாசினி சுரங்கத்துக்கு சென்று வந்தால் அவர்கள் உடலில் இருக்கின்ற கிருமிகள் அழிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த கிருமி நாசினியால் மனிதர்களுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை.

இந்த கிருமிநாசினி சுரங்கத்தை வடிவமைத்த வெங்கடேசன் என்பவர் இதுகுறித்து கூறியபோது, ‘அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியே வரும் பொது மக்களின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் அவர்களின் இந்த முயற்சியை அனைத்து மாவட்டங்களிலும் பயன்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்