close
Choose your channels

நம்பர் ஒன் விஜய்யா? அஜித்தா? ரெண்டு பேருமே இல்லை.. திருப்பூர் சுப்பிரமணியன்

Saturday, December 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ நேற்று, ‘தமிழ்நாட்டை பொறுத்தவரை விஜய்தான் நம்பர் ஒன் என்றும் வசூல் அளவில் அவருடைய படங்கள் அஜித் படங்களை விட அதிகமாக வசூல் செய்யும் என்றும் அதனால் ‘வாரிசு’ படத்திற்கு அதிக தியேட்டர்களை வழங்க வேண்டும் என்றும் கூறிய வீடியோ இணையதளங்களில் வைரலானது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் அவர்கள் கூறியபோது, ‘தில் ராஜூ நம்பர் ஒன் விஜய் தான் என்பதை எதை வைத்து முடிவு செய்தார்? அவர் விஜய்யை வைத்து நல்ல படம் எடுத்து சம்பாதிக்கட்டும், அதைப் பற்றி எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஆந்திராவில் இருந்து கொண்டு அவர் தமிழகத்தின் நம்பர் ஒன் விஜய்தான் என்று சொல்வதில் அர்த்தமில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் செய்தது. அப்படி என்றால் ரஜினி, அஜித், விஜய்யை விட நம்பர் ஒன் கமல்ஹாசன் என்று சொல்ல முடியுமா?

’விக்ரம்’ படத்தின் வசூலை ஒரே மாதத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் முறியடித்தது. அப்படி என்றால் ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் தான் நம்பர் 1 என்று சொல்வதா? தமிழ் சினிமாவை பொறுத்தவரை கதைதான் நம்பர் ஒன் அஜீத்தோ விஜய்யோ ரஜினியோ கிடையாது . கதை தான் நம்பர் ஒன். கதை நன்றாக இருந்தால் அந்த படம் நன்றாக ஓடி வசூலை குவிக்கும்’ என்று தெரிவித்து உள்ளார். அவரது இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.