ஆகஸ்ட் 15ல் எஸ்.எஸ்.ராஜமெளலி தரவுள்ள ஆச்சரியம்!

'பாகுபலி' படத்தின் ஹீரோவாக நடித்த பிரபாஸ் நடித்த அடுத்த படமான 'சாஹோ' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆகிய நிலையில் பாகுபலி பட இயக்குனரின் அடுத்த படமான 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்து வரும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தில் வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர். ரசிகர்களுக்கு அன்றைய தினம் மிகப்பெரிய விருந்தாக இருக்கும்.

ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், அஜய்தேவ்கான், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்து வருகிறார். இரண்டு இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் கதையான இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு ஜூலை 30ல் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட இந்தியாவின் முக்கிய பத்து மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.