தமிழிசை சவுந்திரராஜனுக்கு புதிய பதவி: தமிழக பாஜக தலைவர் யார்?

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் தற்போது தெலுங்கானா மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் வகித்து வந்த தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா, ஹிமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுனர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனையடுத்து தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்தரராஜனும் கேரள ஆளுநராக ஆரிப் முகமது கான் அவர்களும், ஹிமாச்சல் பிரதேசத்தின் ஆளுநராக பண்டாரு தத்தாட்ரேயா அவர்களும், மகாராஷ்டிரத்தின் ஆளுநராக பகத் சிங் கோஷ்யாரி அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு விரைவில் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.வி.சேகர், இல.கணேசன், சிபி ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர்களில் ஒருவர் புதிய தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

இந்த வாரம் வெளியாகும் நான்கு திரைப்படங்கள்: ஒரு பார்வை

ஒவ்வொரு வாரமும் கோலிவுட் திரையுலகில் குறைந்தது நான்கு திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரம் அதாவது செப்டம்பர் 6ஆம் தேதி வெள்ளியன்று

பார்வையாளரின் கேள்விக்கு பதில் சொல்ல திணறிய லாஸ்லியா!

ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று பார்வையாளர் ஒருவரின் கேள்விக்கு போட்டியாளர்கள் பதில் சொல்வது வழக்கமாக இருந்து வருகிறது. ஒட்டுமொத்த பார்வையாளரின் பிரதிநிதியாக ஒருவர்

கமலுக்கே ஒரு குறும்படம்: இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எவிக்சன் இல்லை என்பது நமக்கு தெரிந்தாலும் போட்டியாளர்களுக்கு தெரியாது என்பதால் இன்றைய எவிக்சன் படலத்தில் முதலில்

வனிதாவை வெளியேற்ற ஹவுஸ்மேட்ஸ் கோரிக்கை! என்ன செய்வார் பிக்பாஸ்?

பிக்பாஸ் வரலாற்றில் பார்வையாளர்களால் வெளியேற்றப்பட்ட ஒரு போட்டியாளர் மீண்டும் போட்டியாளராக அனுமதிக்கப்பட்டது வனிதா மட்டுமே என்று பலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் வரி: நாளை முதல் அமல்

கடைசி நேர பரபரப்பை தவிர்க்க நீண்ட தூரம் ரயில் பயணம் செய்பவர்கள் முன்கூட்டியே டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து வருவது வழக்கமாக உள்ளது