close
Choose your channels

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து: முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!

Thursday, July 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த 4 மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் பள்ளித்தேர்வுகள் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் கல்லூரிகளில் இன்னும் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படவில்லை என்பதால் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது

இந்த நிலையில் இந்த கோரிக்கைகளை பரிசீலித்த முதல்வர் பழனிசாமி இன்று இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத் தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக் குழு ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக அக்குழு தன்னுடைய பரிந்துரையை தெரிவித்துள்ளது.

* மாணாக்கர்களின் நலன் கருதி, பல்கலைக்கழக மானியக் குழு (UGC)மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு (AICTE) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, மதிப்பெண்கள் வழங்கி,

* முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கும் (Bachelor Degree Arts and Scince) மற்றும் பாலிடெக்னிக் பட்டயப் படிப்பு (Polytechnic Diploma) பயிலும் மாணாக்கர்களுக்கும்,

* முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும், (Master Degree First Year)

* இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் (BE)

* முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும், (ME)
அதேபோன்று, எம்.சி.ஏ. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும்

இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த அறிக்கையின்படி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் தவிர மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து என்பது உறுதியாகியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.