close
Choose your channels

ஜூலை 6 முதல் சென்னையில் என்னென்ன கட்டுப்பாடுகள், தளர்வுகள்: முதல்வர் அறிவிப்பு

Saturday, July 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் ஜூலை 5 வரை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூலை 6 முதல் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதன்படி ஜூலை 6 முதல் சென்னையில் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல்கள் மட்டும் வழங்கலாம். அதேபோல் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட உணவகங்களில் காலை 6 முதல் இரவு 9 மணி வரை பார்சல் வழங்க அனுமதிக்கப்படும். மேலும் தொலைபேசியில் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைக்கு இரவு 9 மணி வரை அனுமதி உண்டு.

அதேபோல் காய்கறிக்கடைகள், மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி என்றும் வணிக வளாகங்கள் தவிர்த்து ஷோரூம்கள், பெரிய கடைகள், ஜவுளி, நகைக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை செயல்படலாம் என்றும் முதல்வரின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.