தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30க்கும் பின்னரும் நீட்டிக்கப்படுமா? முதல்வர் பரபரப்பு தகவல் 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் அடுத்தடுத்து ஐந்து கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு நடைபெற்று வரும் நிலையில் இந்த ஊரடங்கு ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30க்கு பின்னரும் நீடிக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது திங்கட்கிழமைக்கு பிறகே தெரியும் என்று கூறினார்

ஊரடங்கு விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்து தமிழகத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும், மருத்துவ நிபுணர்களுடன் ஜூன் 29 ஆம் தேதி அன்று ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்குப் பின்னரே ஊரடங்கு உத்தரவு நீடிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு மாதம் நீட்டிக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஏற்கனவே மேற்குவங்க முதல்வர் ஜூலை 31வரை ஊரடங்கை நீட்டித்து சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

டிக்டாக் பிரபலமான 16 வயது இளம்பெண் தற்கொலை: மிரட்டப்பட்டதாக புகார்

டெல்லியில் லட்சக்கணக்கான ஃபாலோயர்களை கொண்ட டிக்டாக் பிரபலம் சியா கக்கர் தற்கொலை செய்துகொண்டது அவரது ரசிகர்களுக்கிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது

பிரியாணி வாங்கித்தர மறுத்த கணவன், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து மனைவி தற்கொலை!

கணவர் பிரியாணி வாங்கித் தரவில்லை என்ற கோபத்தால் மனைவி தீவைத்து தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

அவரு ஒரு தியாகி- பாகிஸ்தான் பிரதமர் கூறிய புதிய கருத்தால் வெடித்தது சர்ச்சை!!!

உலகிலேயே அதி பயங்கரவாதியாக அறியப்பட்ட ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்,

வீட்டுக் கொல்லையில் சுரங்கம் தோண்டிய இளைஞர்: ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆனார்!!!

ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த ஒரு ஏழை நாடு தான்சானியா. இந்நாட்டில் அதிகளவு கனிம வளங்கள் கிடைக்கின்றன.

டிவி பார்த்தால் குழந்தைகளின் உடல் பருமன் கூடுமா??? வெளியான அதிர்ச்சித் தகவல்!!!

சிறிய வயதில் குழந்தைகள் சற்று உருண்டு இருப்பதை பெரும்பலான பெற்றோர்கள் விரும்புகின்றனர்