என் அம்மாவை இப்படி பேசிவிட்டார்களே: கண்கலங்கிய தமிழக முதல்வர்!

  • IndiaGlitz, [Monday,March 29 2021]

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திமுக எம்பி ஆ ராசா பேசியதாக கூறப்படும் நிலையில் ’என் அம்மாவை எப்படி பேசி விட்டார்களே’ என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கண்ணீருடன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக எம்பி ஆ ராசா, ஸ்டாலின் பிறப்பு குறித்தும் முதல்வர் பிறப்பு குறித்தும் ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இதனை அடுத்து அவருக்கு கண்டனங்கள் குவிந்து வந்தது

இந்த நிலையில் சென்னையில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து கூறியபோது ’என்னுடைய அம்மாவை இப்படி பேசி விட்டார்களே, அம்மா என்பது ஒவ்வொருவருக்கும் உயர்வானவர். முதலமைச்சரின் அம்மாவையே இப்படி பேசுகிறவர்கள், நாளை ஆட்சிக்கு வந்தால் மற்ற பெண்களின் நிலைமை என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். அவர் இவ்வாறு பேசியதற்கு கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார் என்று கண்கலங்கி கண்ணீருடன் பேசினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் இதுகுறித்து ஆ ராசா விளக்கம் அளிக்கையில்,ம் ‘தான் இயல்பாக பேசியதை திரித்து பரப்பி வருவதாகவும், தனது பேச்சை வெட்டி அவதூறாக பரப்பி வருவதாகவும் முதல்வர் தாயார் குறித்து தான் எந்தவிதமான அவதூறு செய்யும் வகையில் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆ ராசா மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பார்பி டாலை மிஞ்சும் அழகு… அசத்தும் முன்னணி நடிகையின் வைரல் போட்டோ ஷுட்!

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா

மாலத்தீவு கடற்கரையில் குட்டித் தூக்கம் போடும் முன்னணி நடிகை… வைரல் புகைப்படம்!

நடிகை காஜல் அகர்வால் துவக்கி வைத்த மாலத்தீவு மேனியா இன்னும் முடிவிற்கே வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

'துருவங்கள் 16' இந்தி ரீமேக்: டைட்டில் மற்றும் நடிகர், நடிகை குறித்த தகவல்!

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'துருவங்கள் 16'. சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இந்த படத்தில் ரகுமான் உள்பட பலர் நடித்திருந்தனர்.

வாத்தி கம்மிங் பாடலுக்கு செம ஆட்டம் போட்ட நடிகை: 20 வருடங்களுக்கு முன் விஜய்யுடன் நடித்தவர்!

தளபதி விஜய் நடிப்பில் அனிருத் இசையில் உருவான 'மாஸ்டர்' படத்தில் இடம் பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடல் உலகப் புகழ் பெற்றது என்பதும் இந்த பாடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள் மட்டுமின்றி

இதைவிட வாழ்க்கையில வேற என்ன வேணும்: டுவின்ஸ் பிறந்த நாளை கொண்டாடிய நட்சத்திர தம்பதி!

பிரபல தொலைக்காட்சி நட்சத்திர தம்பதிகள் தங்களுடைய டுவின்ஸ் குழந்தைகளின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது