பவன்கல்யாண் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்த முதல்வர்

ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீகாகுளம் என்ற பகுதியைச் சேர்ந்த 99 ஆந்திர மாநில மீனவர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை துறைமுகத்தில் சிக்கி தவிப்பதாகவும், அவர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான உணவு உறைவிடம் வழங்க வேண்டும் என்றும் பின்னர் அவர்களை பத்திரமாக சொந்த மாநிலத்திற்கு தகுந்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான பவன்கல்யாண் இன்று காலை கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த கோரிக்கை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட துறைக்கு இது குறித்து அறிவித்து அந்த 99 மீனவர்களுக்கும் தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி உத்தரவிட்டார்.

இதனை அடுத்து பவன் கல்யாணுக்கு அவர் பதிலளிக்கையில் ’சென்னை துறைமுகத்தில் இருக்கும் 99 மீனவர்களின் நலன் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். நாங்கள் அவர்களை பத்திரமாக பாதுகாப்போம், கவலை வேண்டாம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பவன் கல்யாணின் ஜனசேனை கட்சியின் சமூகவலைதளத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அமெரிக்கா; நடைமுறையில் இருக்கும் சமூக விலகல் ஏப்ரல் 30 வரை தொடரும்!!! ட்ரம்ப் அறிவிப்பு!!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக நடைமுறையில் உள்ள சமூக விலகல் ஏப்ரல் 30 வரை தொடரும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார் .

கொரோனா; ஆபத்தான நகரங்களில் ஒன்று சென்னை!!! இலங்கை சுகாதாரத்துறை அறிவிப்பு!!!

கொரோனா பரவலைத் தடுக்க இலங்கை அரசு பல தடுப்பு நடவடிக்ககைளை எடுத்து வருகிறது. கொரோனா பாதிப்புள்ள ஒரு கிராமத்தை முற்றிலும் தனிமைப்படுத்தி இரா

கொரோனா வைரஸ் இப்படித்தான் இருக்கும்!!! புகைப்படம் வெளியிட்ட இந்திய மருத்துவக் கழகம்!!!

கொரோனா பாதிப்பினால் உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இக்கட்டான சூழலைச் சந்தித்து வருகிறது.

சம்பளம் இன்றி நர்ஸாக பணிபுரியும் பிரபல நடிகை

பாலிவுட் திரையுலகின் காஸ்டியூம் டிசைனராக இருந்து அதன்பின் நடிகையாக மாறியவர் ஷிகா மல்ஹோத்ரா. 'அன்சீன்' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி

தமிழகத்தில் மேலும் 17 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: முதல்வர் பழனிச்சாமி தகவல்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரிகளுடன் சற்றுமுன் ஆலோசனை செய்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி, இந்த ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: