"ஒன்றிய அரசு" என அழைக்க காரணம் என்ன....? முதல்வர் முக.ஸ்டாலின் பதில்....!

ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பார்த்து யாரும் பயப்பட தேவையில்லை என, தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கூறியுள்ளார்.கடந்த 50 வருடங்களுக்கு முன்பாகவே, அதாவது 1963-இல் நாடாளுமன்றத்தில் அறிஞர் அண்ணா இந்த வார்த்தை குறித்து பேசியுள்ளார். ஒன்றியம் என்ற வார்த்தையில், கூட்டாட்சித் தத்துவம் உள்ளதால், அதை பயன்படுத்துவோம், பயன்படுத்திக்கொண்டே இருப்போம் என முதல்வர் கூறியுள்ளார்.

இதையடுத்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மத்திய அரசை ஏன் ஒன்றிய அரசு என அழைக்கிறீர்கள், இதுகுறித்து முதல்வர் விளக்கமளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலாக முதல்வர் முக. ஸ்டாலின் கூறியிருப்பதாவது,
மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதை தவறாகவோ, குற்றமாகவோ கருத வேண்டாம். சட்டத்தில் இல்லாதது குறித்து நாங்கள் பேசவில்லை, அரசியல் சாசனத்தில் கூறியிருப்பதைத் தான் நாங்கள் சொல்லியிருக்கிறோம். அண்ணா, கலைஞர் கூறாததை நாங்கள் சொல்வதாக விமர்சனம் செய்கிறார்கள். கூட்டாட்சி தத்துவத்தை, 'ஒன்றிய அரசு' என்ற வார்த்தை பிரதிபலிப்பதால் இதை தொடர்ந்து பயன்படுத்துவோம் என்று பதிலளித்தார்.

இதற்கு நயினார் நாகேந்திரன், இந்தியாவில் இருந்து தான் மாநிலங்கள் பிரிந்தது என்று கூறினார். இதன்பின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியிருப்பதாவது, மாநிலங்கள் இந்தியாவில் இருந்து பிரியவில்லை, அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்தது தான் இந்தியா என விளக்கம் கூறினார்.

 

More News

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது?

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'பீஸ்ட்'.

'மாநாடு' படத்துடன் மோதுகிறதா 'விக்ரம் 60'?

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

நடிகை டாப்ஸி நடிக்கும் மேலும் ஒரு தமிழ்ப்படம்: இயக்குனர் யார் தெரியுமா?

கடந்த 2010ஆம் ஆண்டு 'ஆடுகளம்' என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை டாப்ஸி அதன்பின் 'வந்தான் வென்றான்' 'ஆரம்பம்' 'வைராஜா வை' உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் ஏராளமான

'மானாட மயிலாட' கோகுல் மனைவியும் க்யூட் குழந்தைகளும்: வைரல் புகைப்படம்!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் புகழ்பெற்ற பல கலைஞர்களின் ஒருவர் கோகுல் என்பதும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான 'மானாட மயிலாட' என்ற நிகழ்ச்சியின் மூலம் இவர் ரசிகர்களை கவர்ந்தார்

இணையதளங்களில் வைரலாகும் நடிகை நதியாவின் யோகா வீடியோ!

சமீபத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே யோகாவின் சிறப்பு குறித்து உரையாற்றினார் என்பதும் பல திரையுலக பிரபலங்கள் யோகா செய்த புகைப்படங்கள்