தகப்பனார் பிறந்தநாள்.... ! ஸ்டாலின் துவங்கவுள்ள நலத்திட்டங்கள்...!

மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், முதலமைச்சர் முக.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக அறிமுகப்படுத்தவுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில், அபார வெற்றியடைந்து ஆட்சியை பிடித்தது. முதல்வராக பதவியேற்ற நாளிலிருந்து ஸ்டாலின் பொதுமக்களுக்காக பல்வேறு நன்மைகளை செய்து வருகிறார். இந்த நிலையில் நாளை(ஜூன்-3) கலைஞர் அவர்களின் பிறந்தநாள் வரவுள்ளது. கோவிட் காரணமாக கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர், திமுக தொண்டர்களுக்கு வலியுறுத்தி இருந்தார். இதேபோல் நாளை சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்தில் தமிழக மக்களுக்காக 5 முக்கிய நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளார்.


1.கொரோனா நிவாரண நிதி ரூ.2000
2. மாதச்சம்பளம் வாங்காத அர்ச்சகர்கள் மற்றும் கோவில் ஊழியர்களுக்கு நிவாரண நிதி ரூ.4000
3. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு, 10கி அரசி மற்றும் 14 வகை மளிகைப்பொருட்கள்
4.கோவிட் காரணமாக உயிரிழந்த மருத்துவர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் நிதி
5. உயிரிழந்த பத்திரிக்கையாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
உள்ளிட்ட திட்டங்களை நாளை அறிமுகப்படுத்துள்ளார்.

ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் திட்டம், வரும் ஜூன்-5 ஆம் தேதி முதல் துவங்குகிறது.

 

More News

இதுபோன்ற நபர்களை சூரசம்ஹாரம் செய்வோம்: PBSS பள்ளி விவகாரம் குறித்து பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

சமீபத்தில் சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆசிரியர் ராஜகோபாலன் கைது

இந்த தருணம் தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது: சூரி டுவிட்

இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து புகைப்படம் எடுத்த அந்த தருணம் தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது என்று நடிகர் சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இசைஞானி இளையராஜா இன்று

'பேட்ட' வேலைனின் மகன் தான் 'ஜகமே தந்திரம்' சுருளியா? கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது 'ஜகமே தந்திரம்' என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பதும் இந்த படம் வரும் 18ம் தேதி நெட்பிளிக்ஸ்

என் போட்டோவுக்கு கமெண்ட் போடறதை விட்டுட்டு உருப்படியா ஏதாச்சும் செய்யுங்க: பிக்பாஸ் ரைசா 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளார் என்பதும் அவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்

பேத்திக்கு இசையமைக்க கற்று கொடுக்கும் இசைஞானி: பிறந்த நாளில் வைரலாகும் வீடியோ!

இசைஞானி இளையராஜா இன்று தனது 77வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் அவருக்கு திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்