இபாஸ் நடைமுறையில் புதிய தளர்வு: அதிரடி அறிவிப்பு விடுத்த முதல்வர் பழனிசாமி

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அவசர காரியமாக செல்ல வேண்டுமென்றால் இபாஸ் வாங்கிய செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அவ்வளவு எளிதில் இபாஸ் கிடைப்பதில்லை என்றும் பல அவசர காரியங்களுக்காக விண்ணப்பிக்கப்பட்ட இபாஸ் நிராகரிக்கப்பட்டது என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன

மேலும் மற்ற அனைத்து மாநிலங்களிலும் இபாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்திலும் இபாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் விண்ணப்பித்த அனைவருக்குமே இபாஸ் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும், விண்ணப்பித்த அனைவருக்கும் இபாஸ் உண்டு என்பதால் தேவையற்ற பயணங்களை செய்ய வேண்டாம் என்றும், தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டுமே இபாஸ் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு வெளியிட்ட வழிகாட்டு நடைமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும், அரசின் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்வதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

More News

தற்கொலை செய்த ரசிகரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய விஜய்!

இன்று காலை முதல் டுவிட்டரில் பாலா என்ற விஜய் ரசிகர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட தகவல் மிக வேகமாக பரவி டுவிட்டரில் டிரெண்ட் ஆனது என்பது தெரிந்ததே.

கொரோனா காலத்திலும் விவசாயிகளின் நலன் காக்கும் தமிழக அரசு!!! அதிரடித் திட்டங்களால் அசத்தும் தமிழக முதல்வர்!!!

இந்திய அளவில் கொரோனாவை சிறப்பாக கையாளும் மாநிலமாகத் தமிழகம் முதலிடம் பெற்றிருக்கிறது.

மலேசியாவின் 3 மாநிலத்திற்கு கொரோனாவை பரப்பிய நபர்… 3 மாதம் சிறை மற்றும் பரபரப்பு சம்பவம்!!!

தமிழகத்தின் சிவகங்கையில் இருந்து மலேசியாவிற்கு சென்ற நபர் அங்குள்ள 3 மாநிலத்திற்கு கொரோனாவை பரப்பியதாக பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது

கணவரின் ஆணுறுப்பை சேதப்படுத்த கூலிப்படையை ஏவிய மனைவி: அதிர்ச்சி தகவல் 

நாகர்கோவில் அருகே கணவரின் ஆணுறுப்பை சேதப்படுத்தி கொலை செய்ய கூலிப்படையை ஏவிய மனைவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பிறப்பு சிவப்பு; இருப்பு கறுப்பு: கமல் குறித்து கவியரசர் எழுதிய கவிதை

உலகநாயகன் கமலஹாசன் திரையுலகிற்கு அறிமுகமாகி 61 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே.