தேர்தல் துளிகள்: 11 மார்ச் 2021

அமமுகவுன் இணைந்த எஸ்.டி.பி.ஐ கட்சி!

முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி தற்போது அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. ஆலந்தூர், ஆம்பூர், பாளையங்கோட்டை, திருச்சி மேற்கு, திருவாரூர், மத்திய மதுரை உள்ளிட்ட தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அமமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெத்தாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.  

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கான தொகுதி அறிவிப்பு!

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது அக்கட்சி போட்டியிட இருக்கிற தொகுதிகள் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதன்படி பவானிசாகர், திருப்பூர் வடக்கு, வால்பாறை, சிவகங்கை, திருத்துறைப் பூண்டி, தளி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

மதிமுக போட்டியிடும் தொகுதிகள்!

திமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் மதிமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதோடு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்தும் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இந்நிலையில் மதிமுக வாசுதேவநல்லூர் (தனி), சாத்தூர், அரியலூர், பல்லடம், மதுராந்தகம் (தனி), மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் இடங்கள்!

திமுக கூட்டணியில் இடம்பிடித்து உள்ள முஸ்லீம் லீக் கட்சிக்கு நேற்று 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதன்படி கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய 3 தொகுதிகளிலும் இக்கட்சி போட்டியிட இருக்கிறது.

அகில இந்திய பார்வர்ட் பிளாக்- தமிழக வாழ்வுரிமை இடங்கள்!

திமுக கூட்டணியில் இடம்பிடித்து தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ள அகில இந்திய பார்வர்ட் பிளாக் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அகில இந்திய பார்வர்ட் பிளாக்– உசிலம்பட்டியிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி- பண்ருட்டியிலும் போட்டியிட இருக்கிறது. 

 

புதுச்சேரி தேர்தல் கூட்டணிகள்!

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆட்சியில் இருந்துவந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இறுதி நேரத்தில் கலைக்கப்பட்டது. இந்நிலையில் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் இணைந்து பாஜக இத்தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட தேசிய ஜனநயாகக் கூட்டணியில் தற்போது என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக மட்டுமே இடம்பெற்று உள்ளன. இந்தக் கூட்டணியில் இருந்து விலகிய பாமக புதுச்சேரியில் தனித்து போட்டியிட உள்ளது.

இதற்காக மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்ஆர்காங்கிரஸ்-16 தொகுதிகளிலும் பாஜக-10 தொகுதிகளிலும் அதிமுக-4 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன. புதுச்சேரியில் இன்னொரு கூட்டணியான காங்கிரஸ்-17 தொகுதிகளிலும் திமுக-13 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிமுக கூட்டணியில் உள்ள பசும்பொன் தேசியக் கழகத்திற்கு  தொகுதி அறிவிப்பு!

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பசும்பொன் தேசிய கழகத்திற்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12 ஆம் தேதி  துவங்க உள்ள நிலையில் நேற்று இந்த அறிவிப்பு வெளியாகியது. மேலும் பசும்பொன் தேசியக் கழகம் இத்தேர்தலில் அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப் போகிறது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

வேட்புமனு தாக்கல் நாளை துவக்கம்!

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஆன தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 12 ஆம் தேதி துவங்கி மார்ச் 19 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 20 ஆம் தேதி நடைபெறும் என்றும் மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி 22 ஆம் தேதி என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியிடும் தொகுதி அறிவிப்பு!

திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அக்கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனால் அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் பண்ருட்டி தொகுதியில் உதயச்சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்ற அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.

More News

குவிந்து கிடக்கும் தங்கம்… குஷியில் கூட்டம் கூட்டமாக அள்ளிச் செல்லும் மக்கள்… அதிர்ச்சி வீடியோ!

தங்கத்தின் விலை உச்சியைத் தொட்டு இருக்கும்போது, ஒரு மலை முழுக்க தங்கம் கொட்டிக் கிடக்கிறது

'திரெளபதி முத்தம் தட்டான் தட்டான்': 'கர்ணன்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கர்ணன்'. இந்த படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருக்கும்

மனைவி, மூன்று குழந்தைகளுடன் செல்வராகவன்: வைரல் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன் என்பதும் அவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதும் தெரிந்ததே.

'குக் வித் கோமாளி' மணிமேகலைக்கு என்ன ஆச்சு? வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

'குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்களில் ஒருவர் மணிமேகலை என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மணிமேகலை இரண்டு வாரங்கள் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வர முடியாத

சீட் கிடைக்காத அதிமுக எம்எல்ஏக்கள்? சசிகலா குறித்து மீண்டும் பீதியை கிளப்பும் வீடியோ!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்று மீண்ட திருமதி சசிகலா குறித்து தமிழகத்தில் அரசியல் விமர்சகர்கள் அனைவரும் ஒரு ஆர்வத்தை வெளிப்படுத்தி இருந்தனர்