'துணிவு' , 'வாரிசு' சிறப்பு காட்சிகளில் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

  • IndiaGlitz, [Thursday,January 12 2023]

அஜித் நடித்த ’துணிவு’ மற்றும் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நேற்று வெளியாகியது என்பதும் இரண்டு படங்களுக்குமே பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் நேற்றும் இன்றும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரி 13 முதல் 16 வரை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னால் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு அந்த உத்தரவில் சில மாற்றம் செய்துள்ளது. அதன்படி ஜனவரி 13 மற்றும் 18 ஆகிய தேதிகளில் திரைப்பட சிறப்பு காட்சிகள் அனுமதி அளித்து ரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் நேற்று வெளியாகியுள்ள ’துணிவு’ ‘வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் இன்றும் நாளையும் சிறப்பு காட்சி திரையிடப்படுவதோடு, ஜனவரி 18ஆம் தேதியும் சிறப்பு காட்சி உண்டு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்படம் விநியோகிஸ்தர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

போர் நடக்கும்போது படமாக்கப்பட்ட பாடல்.. 'நாட்டு நாட்டு' குறித்த அரிய தகவல்!

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் எம்எம் கீரவாணி இசையில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்'  படத்தில் இடம்பெற்ற  'நாட்டு நாட்டு'  என்ற பாடல் கோல்டன் குளோப் விருது பெற்றது என்பதை ஏற்கனவே

அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும்.. போனிகபூர் வாரிசு தெரிவித்த விருப்பம்!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அஜித்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என 'துணிவு' படத்தின் தயாரிப்பாளரான போனிகபூரின்

மாரி செல்வராஜின் 'வாழை' படத்தின் செம அப்டேட்!

இயக்குனர் மாரி செல்வராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'வாழை' என்ற திரைப்படத்தை தொடங்குவதாக அறிவித்த நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

அர்ஜூன் தாஸ் உடன் காதலா? 'பொன்னியின் செல்வன்' நடிகையின் வைரல் பதிவு

லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' மற்றும் 'விக்ரம்' ஆகிய படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ் உடன் 'பொன்னியின் செல்வன் நடிகைக்கு காதல் என்பது அவரது சமீபத்தில் பதிவின் மூலம்

இதுக்காகத்தான் காத்திருந்தேன்.. இனிமேல் தொடர்ந்து அப்டேட் தான்: லோகேஷ் கனகராஜ்

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவரும் நிலையில் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியை பல திரையுலக பிரபலங்கள் பார்த்து தங்களது கருத்துக்களை