ஆக்சிஜன் அவசர தேவையா? உதவி எண் அறிவித்த தமிழக அரசு!

தமிழகத்தில் தினமும் கொரோனா வைரசால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு செலுத்துவதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் நிலை இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் உடனடியாக 104 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது.

கோவிட்‌-19 தொற்று பரவுதலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவிட்‌-19 தொற்றால்‌ பாதிக்கப்படுவோர்‌ எண்ணிக்கை அதிகரிப்பதால்‌, மருத்துவமனைகள்‌, நர்சிங்‌ ஹோம்கள்‌ போன்ற கோவிட்‌-19 சிகிச்சை அளிக்கும்‌ இடங்களில்‌ மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தேவை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாநிலத்திலுள்ள ஆக்ஸிஜன்‌ உற்பத்தி செய்யும்‌ தொழிற்சாலைகள்‌ அதன்‌ உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன்‌ கிடைப்பதை அதிகரிப்பதற்காக, மருத்துவ ஆக்ஸிஜனை ஏற்றிச்‌ செல்லும்‌ டேங்கர்‌ லாரிகள்‌ விரைவாக மருத்துவமனைகளை வந்தடைய தேவைப்படும்‌ இடங்களில்‌ காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அத்தகைய மருத்துவமனைகள்‌, நர்சிங்‌ ஹோம்களில்‌ ஏற்படும்‌ மருத்துவ ஆக்ஸிஜன்‌ வழங்கல்‌ தொடர்பான சிக்கல்களைத்‌ தீர்க்க, மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரின்‌ கீழ்‌ 24 மணி நேரமும்‌ இயங்கும்‌ கால்‌ சென்டரை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ ஆக்ஸிஜன்‌ பற்றாக்குறையினை எதிர்கொள்கிற தமிழ்நாட்டில்‌ உள்ள மருத்துவமனைகள்‌, நர்சிங்‌ ஹோம்கள்‌ உடனடியாக 104 என்ற எண்ணில்‌ உதவிக்கு அழைக்கலாம்‌.

More News

அடுத்த மார்ச் 2022 லும் கொரோனா மிரட்டுமா? பதைக்க வைக்கும் மருத்துவரின் வீடியோ விளக்கம்!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி வெறும் 11 என்ற எண்ணிக்கையி&

1 ரூபாயை பெற்றுக்கொண்டு ஆக்சிஜன் சிலிண்டரை நிரப்பிக் கொடுக்கும் நல்ல உள்ளம்!

கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டரை  1 ரூபாயைப் பெற்றுக்கொண்டு உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நபர் நிரப்பிக் கொடுத்து வருகிறார்.

தமிழக மக்களுக்கு சுகாதாரச் செயலாளர் கூறிய முக்கிய அறிவுரை!

கொரோனா வைரஸின் இரண்வடாது அலை இந்தியா முழுவதும் தீவிரம் பெற்று வருகிறது.

காசிமேடு மீன்மார்க்கெட்டில் குவிந்த கூட்டம்: கொரோனாவுக்கு கொண்டாட்டம்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சகட்டத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒரு பக்கம் மத்திய மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து

கமுதி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு அரிவாள் வெட்டு… முன்விரோதம் காரணமா?

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட ஒரே குடும்பத்தைச்