close
Choose your channels

போக்குவரத்து தொடக்கம், இ-பாஸ் தேவையில்லை: தமிழக அரசின் தளர்வுகள் அறிவிப்பு

Sunday, May 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாளை முதல் அமல்படுத்தப்படும் நிலையில் இந்த ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் தளர்வுகள் குறித்து மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது. அதன்படி தற்போது தமிழக அரசும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் மாநிலம் முழுவதும் செல்வதற்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது: இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அனைத்து தனியார்‌ நிறுவனங்களும்‌ 50 விழுக்காடு பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும்‌, இயன்ற வரை பணியாளர்கள்‌ வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார்‌ நிறுவனங்கள்‌ ஊக்குவிக்க வேண்டும்‌.

வணிக வளாகங்கள்‌ மால்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள்‌ மற்றும்‌ பெரிய கடைகள்‌ நகை, ஜவுளி போன்ற கடைகள் 50% பணியாளர்களுடன்‌ செயல்படலாம்‌. மேலும்‌, ஒரே நேரத்தில்‌ அதிகபட்சம்‌ 5 வாடிக்கையாளர்கள்‌ மட்டும்‌ கடைக்குள்‌ வருவதை உறுதி செய்து. தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும்‌ வகையில்‌, அனுமதிக்கப்பட வேண்டும்‌. கடைகளில்‌, குளிர்‌ சாதன இயந்திரங்கள்‌ இருப்பினும்‌ அவை
இயக்கப்படக்‌ கூடாது.

மத்திய அரசு உத்தரவின்படி 08.6.2020 முதல்‌ உணவகங்களில்‌ அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில்‌, சமூக இடைவெளியை கடைபிடிக்கும்‌ நோக்கத்துடன்‌, உணவகங்களில்‌ உள்ள மொத்த இருக்கைகளில்‌, 50 விழுக்காடு இருக்கைகளில்‌ மட்டும்‌ வாடிக்கையாளர்கள்‌ அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும்‌, உணவகங்களில்‌ குளிர்‌ சாதன இயந்திரங்கள்‌ இருப்பினும்‌ அவை இயக்கப்படக்‌ கூடாது.

வாடகை மற்றும்‌ டாக்ஸி வாகனங்களை, ஒட்டுநர்‌ தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, மண்டலத்திற்குள்‌ இ-பாஸ் இன்றி பயன்படுத்தலாம்‌.

ஆட்டோக்களில்‌, ஒட்டுநர்‌ தவிர்த்து, இரண்டு பயணிகள்‌ மட்டுமே பயணிக்கலாம்‌. சைக்கிள்‌ ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது.

முடிதிருத்தும்‌ மற்றும்‌ அழகு நிலையங்கள்‌ குளிர்‌ சாதன வசதியைப்‌ பயன்படுத்தாமல்‌ அரசு தனியாக வழங்கும்‌ நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.

மாநிலத்தில்‌ பொது பேருந்து போக்குவரத்தை 1.6.2020 முதல்‌ நடைமுறைப்படுத்தும்‌ பொருட்டு, மாநிலம்‌ கீழ்கண்ட 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது

கோயம்புத்துர்‌, நீலகிரி, ஈரோடு, திருப்பூர்‌, கரூர்‌, சேலம்‌ மற்றும்‌ நாமக்கல்‌

தருமபுரி, வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை மற்றும்‌ கிருஷ்ணகிரி

விழுப்புரம்‌, திருவண்ணாமலை, கடலூர்‌ மற்றும்‌ கள்ளக்குறிச்சி

நாகப்பட்டினம்‌, திருவாரூர்‌, தஞ்சாவூர்‌, திருச்சிராப்பள்ளி, அரியலூர்‌, பெரம்பலூர்‌ மற்றும்‌ புதுக்கோட்டை

திண்டுக்கல்‌, மதுரை, தேனி, விருதுநகர்‌, சிவகங்கை மற்றும்‌ இராமநாதபுரம்

காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் செங்கல்பட்டு

சென்னை காவல்‌ எல்லைக்குட்பட்ட பகுதி

மண்டலம்‌ 7-ல்‌ உள்ள காஞ்சிபுரம்‌, திருவள்ளூர்‌, செங்கல்பட்டு மாவட்டங்கள்‌ மற்றும்‌ மண்டலம்‌ 8ல்‌ உள்ள சென்னை காவல்‌
எல்லைக்குட்பட்ட பகுதிகள்‌ தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள்‌, 50 விழுக்காடு பேருந்துகள்‌ மட்டும்‌ இயக்கப்படும்‌.

மண்டலம்‌7 மற்றும்‌ மண்டலம்‌ 8-க்கு உட்பட்ட பகுதிகளில்‌ பொது போக்குவரத்து பேருந்‌துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.