அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து: தமிழக அரசின் உத்தரவால் விஜய், அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Tuesday,January 10 2023]

அஜித் நடித்த ’துணிவு’ மற்றும் விஜய் நடித்த ’வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் நாளை பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் குறிப்பாக அதிகாலை காட்சிகள் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. அஜித் நடித்த ’துணிவு’ அதிகாலை ஒரு மணிக்கும், விஜய் நடித்த ’வாரிசு அதிகாலை 5 மணிக்கும் திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் ஜனவரி 13 முதல் 16 வரை அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகளில் உயரமான பேனர்கள் வைக்கவும் பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 13 முதல் 16 வரை அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் விஜய், அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும், நாளை மற்றும் நாளை மறுநாள் அதாவது ஜனவரி 11, 12 ஆகிய இரு நாட்களும் அதிகாலை காட்சிக்கு அனுமதி உண்டு என்பதால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

More News

மைனாவுடன் மீண்டும் ஜோடி டான்ஸ் ஆடும் விக்ரமன்: வைரல் வீடியோ

 பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே விக்ரமன் மற்றும் மைனா ஓரிருமுறை டான்ஸ் ஆடிய நிலையில் தற்போது மீண்டும் டான்ஸ் ஆடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

'வாரிசு' படப்பிடிப்பு முடிந்தவுடன் மருத்துவமனையில் அட்மிட் ஆன விஜய்: குஷ்பு கூறிய அதிர்ச்சி தகவல்

 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் மருத்துவமனையில் விஜய் அட்மிட் ஆனதாக இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள குஷ்பூ தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துணிவா? வாரிசா? டாஸ் போட்டு முடிவு செய்த ரசிகர்கள்

அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் நாளை பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 2 திரைப்படங்களுக்கும் தமிழகத்தில் கிட்டத்தட்ட சம அளவில்

இந்த மாதிரி ஒரு அட்டாக்கை இந்தியா யோசித்து கூட பார்த்திருக்காது: 'பதான்' டிரைலர்

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்த 'பதான்' திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய செய்திகள் கடந்த சில நாட்களாக வைரலான நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபுதேவாவை உரிச்சு வச்சது போல் இருக்கும் அவரது மகன்.. வைரல் புகைப்படம்!

பிரபுதேவாவின் மகன் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவரை அப்படியே உரித்து வைத்தது போல் அவரது மகன் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.