கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் கட்டணம் எவ்வளவு? தமிழக அரசு நிர்ணயம்

சமீபத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் குறித்து ஐ.எம்.ஏ தனது பரிந்துரைகளை தெரிவித்து இருந்தது. அதன்படி லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக ரூ.2,31,820 ஆகவும், அதிக பாதிப்புள்ள கொரோனா நோயாளிக்கு 17 நாட்கள் கட்டணமாக ரூ.4,31,411 நிர்ணயம் சிகிச்சை கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம் வாங்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாண்புமிகு அம்மாவின்‌ அரசு கொரோனா நோய்‌ தொற்று தடுப்பு மற்றும்‌ சிகிச்சை முறைகள்‌ குறித்து தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 03.06.2020 அன்று இவ்வரசு முதலமைச்சரின்‌ விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்‌ கீழ்‌ கொரோனா நோய்‌ தொற்றிற்கு கட்டணமில்லாமல்‌ சிகிச்சைகள்‌ அளிப்பது குறித்து ஒர்‌ ஆணை வெளியிடப்பட்டது.

கொரோனா நோய்‌ தொற்றினால்‌ பாதிக்கப்பட்டு தனியார்‌. மருத்துவமனைகளை அணுகும்‌ நோயாளிகள்‌, தனியார்‌ மருத்துவமனைகள்‌ அதிக கட்டணம்‌ வசூலிப்பதாக தொடர்ந்து புகார்களை எழுப்பி வருகின்றனர்‌. இது தொடர்பான செய்திகள்‌ பத்திரிக்கைகளிலும்‌ ஊடகங்களிலும்‌ வெளியிடப்பட்டு வருகின்றன. இதனைத்‌ தவிர, இந்திய மருத்துவச்‌ சங்கம்‌ தமிழ்நாடு கிளை நிர்வாகிகள்‌ கொரோனா நோய்‌ தொற்று கண்ட நோயாளிகளுக்கு தனியார்‌ கட்டணம்‌ தொடர்பாக சில கோரிக்கைகளை அரசின்‌ முன்‌ வைத்தனர்‌.

இதனைத்‌ தொடார்ந்து, மக்கள்‌ நல்வாழ்வுத்துறை செயலாளர்‌ தலைமையில்‌ அமைக்கப்பட்ட குழு தனியார்‌ மருத்துவமனையில்‌ கொரோனா நோயாளிகளிடமிருந்து பெற அனுமதிக்கப்படவேண்டிய தினசரி கட்டணங்கள்‌ மற்றும்‌ நிபந்தனைகள்‌ குறித்து தனது அறிக்கையினை அரசிடம்‌ அளித்தது. இவ்வறிக்கையை கவனமுடன்‌ ஆய்வ செய்த தமிழ்நாடு அரசு, மக்கள்‌ நலன்‌ கருதி கீழ்காணும்‌ கட்டணங்களை நிர்ணயிக்கவும்‌ சில நிபந்தனைகளை விதிக்கவும்‌ உத்தேசித்து அவ்வாறே ஆணையிடுகிறது.

இதன்படி பொது வார்டில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 5,000 முதல் 7,000 ரூபாய் கட்டணம் நிர்ணயம் நிர்ணயிக்கப்படுகிரது. அதேபோல் தீவிர சிகிச்சை பிரிவில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றால் அவர்களுக்கு தினமும் ரூபாய் 15,000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது

இந்த கட்டணங்கள்‌ அதிகபட்ச கட்டணமாகும்‌. இக்கட்டணத்திற்கு மேலான தொகையை நோயாளிகளிடமிருந்து வசூலிக்க கூடாது. கொரோனா தொற்றினால்‌ ஏற்பட்டுள்ள உலகளாவிய மருத்துவ பேரிடர்‌ காலத்தில்‌ அரசு மருத்துவமனைகளும்‌, தனியார்‌ மருத்துவமனைகளும்‌ இணைந்து செயல்படும்‌. இதுபோன்ற மக்கள்‌ நலன்‌ காக்கும்‌ நடவடிக்கைகளின்‌ மூலம்‌ கொரோனா சிகிச்சை முறைகள்‌ மேலும்‌ வலுப்படும்‌

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

More News

ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை: இனவெறிக்கு எதிரான பேரணியில் கலந்து கொண்ட கனட அதிபர்!!!

அமெரிக்காவில் கடந்த மே 25 ஆம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் காவல் துறையினரின் பிடியில் சிக்கி உயிரிழந்தார்.

குழந்தைகளுக்கு லாலிபாப் வாங்க நினைத்த அமைச்சரின் பதவி பறிபோனது!!! காரணம் என்ன தெரியுமா???

மடகாஸ்கரில் கோவிட் ஆர்கானிக் என்ற மூலிகை மருந்து கொரோனா நோய்த் தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

நயன்தாரா - ரம்யா கிருஷ்ணன்: அம்மன் வேடத்தில் பெஸ்ட் யார்? 

தமிழ் சினிமாவில் இதுவரை பல அம்மன் திரைப்படங்கள் வந்துள்ளன என்பதும் அவற்றில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன என்பதும் தெரிந்ததே.

வித்தியாசமான முறையில் பீட்டாவிற்கு விளம்பரம் செய்த ரகுல் ப்ரித்திசிங்

சூர்யா நடித்த 'என்ஜிகே', கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று', 'தேவ்' உள்பட ஒருசில தமிழ் படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்.

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் ரீஎன்ட்ரி ஆகும் ரோஜா: பரபரப்பு தகவல் 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பெரும்பாலான திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்தாலும் 'விக்ரம் வேதா', 'பேட்ட', 'மாஸ்டர்' உட்பட ஒரு சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.