அரசுடமையானது ஜெயலலிதாவின் 'வேதா இல்லம்': மீட்டெடுப்பேன் என ஜெ.தீபா சபதம்!

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 'வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு சமீபத்தில் முடிவு செய்தது. ஆனால் இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது சகோதரர் தீபக் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில், ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, வீட்டை கையகப்படுத்துவதற்காக, வீட்டிற்கான இழப்பீட்டு தொகையான 67.90 கோடி ரூபாயை, நீதிமன்றத்தில் அரசு செலுத்த வேண்டும் என, நிலம் கையகப்படுத்தும் அதிகாரி லட்சுமி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ரூ. 68 கோடியை தமிழக அரசு செலுத்தியது. 

இதனை தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: ஜெயலலிதா வசித்த வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டது. இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்டவர்கள், சிட்டி சிவில் நீதிமன்றத்தின் மூலம் பெற்று கொள்ளலாம். நினைவு இல்லத்தில் ஒரு பகுதியை முதல்வர் முகாம் அலுவலகமாக பயன்படுத்தலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லை. நினைவு இல்ல முகாம் அலுவலகம் அமைக்கப்பட மாட்டாது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை சட்டரீதியாக மீட்டெடுப்பேன் என்றும், அரசுடைமையாக்கியதை எதிர்த்து சட்டரீதியாக மேல்முறையீடு செய்வோம் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

More News

எனக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு கும்பல்: ஏ.ஆர்.ரஹ்மானின் அதிர்ச்சி பேட்டி

சமீபத்தில் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கை, பாலிவுட்டில் ஒரு கும்பல் அவருக்கு எதிராக சதி செய்தது என்றும், அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தட்டிப்பறித்தது

கொரோனா காலத்திலும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.7,043 கோடி கடன்!!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!!

தமிழக அரசு கொரோனா பேரிடர் காலத்தில் முடங்கிக் கிடக்கும் தொழில் அமைப்புகளை மேம்படுத்தும் வகையிலான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முதல்முறையாக மாநில முதல்வருக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 13 லட்சத்திற்கும்

விமான பயணத்துல கொரோனா வந்தா செலவை நாங்களே ஏத்துக்கிறோம்!!! அலற வைக்கும் புதுயுக்தி!!!

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் பயணிகளைக் கவருவதற்காகத் தற்போது ஒரு புது டெக்னிக்கை பயன்படுத்த இருக்கிறது.

ரஜினிக்கு ரூ.100 அபராதம் விதித்தது உண்மையா? மாமல்லபுரம் கூடுதல் எஸ்பி விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது தெரிந்ததே.