பிகில்' படத்திற்கு அதிகாலை காட்சி அனுமதி இல்லையா?

  • IndiaGlitz, [Friday,October 18 2019]

கடந்த சில வருடங்களாக முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படங்கள் மட்டுமன்றி அனைத்து நடிகர்கள் நடித்த படங்களும் அதிகாலை காட்சி திரையிடுவதை திரையரங்கு உரிமையாளர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்கு வசதியாக இருந்தது.

இந்த நிலையில் வரும் தீபாவளியன்று விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படமும் அதிகாலை காட்சி திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ’பிகில்’ படத்திற்கு அதிகாலை காட்சிக்கான அனுமதியை இன்னும் அரசு வழங்கவில்லை என்று ஒரு செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது.

இது குறித்து திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் கூறிய போது ’பொதுவாக அதிகாலை காட்சிக்கு அரசு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அனுமதி அளிக்கும். அந்த வகையில் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அரசு அனுமதி அளிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மத்திய அரசு தற்போது 24 மணி நேரமும் திரையரங்குகளில் காட்சிகள் ஒளிபரப்பலாம் என்று சட்டம் இயற்றி இருக்கும் நிலையில் அதிகாலை காட்சிக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கும் என்றே நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

’பிகில்’ ஆடியோ விழாவில் நடிகர் விஜய் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால்தான் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை ஒரு வதந்தி கோலிவுட்டில் பரவி வரும் நிலையில் இந்த வதந்தி உண்மையா? அல்லது அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'பிகில்' படம் குறித்து அர்ச்சனா கல்பாதியின் அடுத்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமான தயாரித்த விஜய்யின் 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் உச்சகட்ட

'பஞ்சமி' நில விவகாரம்: டாக்டர் ராமதாசுக்கு முக ஸ்டாலின் சவால்!

சமீபத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில், 'அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து

பொன்னியின் செல்வன்: சத்யராஜூக்கு பதில் நடிக்கும் பிரபல நடிகர்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே.

'பிகில்' டிரைலரை பாராட்டிய பிரபல வீராங்கனை

தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏஆர் ரகுமானின் இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'பிகில்'திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது 

அமிதாப்பச்சனுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கடந்த 15-ந் தேதி நள்ளிரவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதையடுத்து அவர் கடந்த மூன்று நாட்களாக மும்பையில் உள்ள தனியார்