ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும்....! உறுதியளித்த முதல்வர் முக.ஸ்டாலின்.....!

அண்மையில் முதல்வரை சந்திந்த பத்திரிக்கையாளர்களிடம், ஊடக சுதந்திரம் தமிழகத்தில் பாதுகாக்கப்படும் என ஸ்டாலின் அவர்கள் உறுதியளித்தார்.

ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி தலைவர் என்.ராம், மூத்த பத்திரிகையாளர் ஆர்.பகவான் சிங், நக்கீரன் கோபால், பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் லட்சுமி சுப்பிரமணியன், இந்துஜா ரகுநாதன் மற்றும் அமைப்பாளர் பீர் முகமது உள்ளிட்டோர், நேற்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர்.

சென்ற ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள் மீது தொடர்ந்து வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெறப்படும் என அண்மையில் முக. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இச்சந்திப்பின் மூலம் முதல்வருக்கு பத்திரிக்கையாளர்கள் இதற்கு நன்றி தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் பேசிய முதல்வர் கூறியதாவது தமிழகத்தில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும், மேலும் பத்திரிக்கையாளர்களின் நலன்கள் குறித்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.