ஆன்லைனில் திரைப்பட டிக்கெட் எடுப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

ஆன்லைனில் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்யும் வழக்கம் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வரும் நிலையில் இதிலுள்ள ஒரே பிரச்சனை என்னவென்றால் சேவை கட்டணமாக ஒவ்வொரு டிக்கெட் எடுக்கும் ரூபாய் 30 பெறுவதுதான். பத்து டிக்கெட் முன்பதிவு செய்தால் சேவைக்கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டிய் நிலை இருந்தது.

இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என ரசிகர்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கமும் இதுகுறித்து கோரிக்கைகளை எழுப்பியிருந்த நிலையில் ஆன்லைன் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்யும் நிறுவனங்கள் இதனை கண்டுகொள்ளாமல் இருந்தன.

இந்த நிலையில் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ஆன்லைனில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கான இணையதள சேவை கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எத்தனை டிக்கெட் முன் பதிவு செய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவை கட்டணம் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு டிக்கெட்டும் முன்பதிவு செய்யப்படும்போது ரூபாய் 30 வசூல் செய்து வந்த நிலையில் இனிமேல் ஒரே நேரத்தில் எத்தனை டிக்கெட் முன் பதிவு செய்தாலும் ரூபாய் 30 மட்டுமே முன்பதிவு கட்டணம் சேவை கட்டணமாக வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு ஆன்லைனில் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்யும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.

More News

பிக்பாஸ்: இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார்?

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வார எவிக்சன் பட்டியலில் கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின் மற்றும் வனிதா ஆகியோர் உள்ளனர்.

சசிகுமாரின் புகழ்பெற்ற கேரக்டரில் அடுத்த பட டைட்டில்

சசிகுமார் நடித்த முதல் திரைப்படமான 'சுப்பிரமணியபுரம்' படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த கேரக்டரின் பெயரே அவரது அடுத்த படத்தின் டைட்டில் ஆகியுள்ளது

அதிக பாரம் ஏற்றிய லாரிக்கு ரூ.2 லட்சத்து 500 அபராதம்: அதிர்ச்சி தகவல்

நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருவதால்

கவின் கன்னத்தில் விழுந்த பளார் அறை! லாஸ்லியா அதிர்ச்சி

பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் கடந்த மூன்று நாட்களாக வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் கவின், ஷெரின் குடும்பத்தினர் மட்டுமே வருகை தரவேண்டியுள்ளது

லான்சன் டொயோட்டா பொதுமேலாளரின் மனைவி சென்னையில் தற்கொலை!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறை அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கின்றது. ஓலா, உபேர் வருகையும் மெட்ரோ ரயிலுமே