சீனாவில் இருந்து வந்த புரோட்டா மாஸ்டருக்கு கொரானோ?

சினாவில் கொரானோவைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு 400க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சீனாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் பலர் நாடு திரும்பி வருகின்றனர்

இந்த நிலையில் சீனாவிலிருந்து தமிழகத்தை சேர்ந்த நீடாமங்கலம் வந்த புரோட்டா மாஸ்டர் ஒருவருக்கு கொரானோவைரஸ் அறிகுறியா? என்ற பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 31ஆம் தேதி சீனாவில் உணவகம் ஒன்றில் பணி பணிபுரிந்த புரோட்டா மாஸ்டர் ஒருவர் தமிழகம் திரும்பி வந்து உள்ளார். அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டு உள்ளதால் உடனடியாக அவர் ஆரம்ப சுகாதார நிலையம் சென்றார்

அவர் சீனாவில் இருந்து வந்தவர் என தெரியவந்ததால் உடனடியாக அவர் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிறப்பு வார்டில் அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இதுகுறித்து திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் கூறியபோது ’சீனாவிலிருந்து சொந்த ஊர் திரும்பிய அவருக்கு பிரத்யேக வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவருடைய ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ரத்தப் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதனையின் முடிவு வந்த பின்னரே அவருக்கு கொரானோ வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளதா? என்பது தெரியவரும் என்றும் அதுவரை அவர் கூடுதல் கண்காணிப்பில் இருப்பார்’ என்றும் கூறினார்

More News

ரவிவர்மாவின் ஓவியம் போல் போஸ் கொடுத்த முன்னணி நடிகைகள்

கோலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் காலண்டருக்கு போஸ் கொடுத்த செய்தியும் அது குறித்த புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பது தெரிந்ததே.

சிம்புவின் 'மாநாடு' படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள்

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாளில் கோவையில் நடைபெற உள்ளது.

கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் - மாநில பேரிடர் அறிவிப்பு

கேரளாவில் அடுத்தடுத்து 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அம்மாநில அரசு “மாநில பேரிடர்” அவசர நிலையை அறிவித்துள்ளது.

2019ல் ஒரு லட்சம் கோடி வருமானம் பெற்ற நிறுவனம் எது தெரியுமா?

உலகின் முன்னணி வீடியோ இணையதளங்களில் ஒன்று யூடியூப் என்பது அனைவரும் அறிந்ததே

ஹிந்தியில் ரீமேக் ஆகும் கார்த்தியின் சூப்பர் ஹிட் படம்: அதிகாரப்பூர்வ தகவல் 

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த தீபாவளி தினத்தில் வெளியான திரைப்படம் கைதி. இந்த திரைப்படம் விஜய்யின் 'பிகில்' திரைப்படத்துடன் வெளியான போதிலும்