தமிழகத்தில் மேலும் 8 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக தாக்கி வரும் நிலையில் இதுவரை தமிழகத்தில் 42 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அவர்களில் 2 பேர் இன்று முழு குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஈரோட்டில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் தாய்லாந்து நாட்டின் நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் இந்த எட்டு பேர்கள் என்றும், தமிழக அரசு தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளின் தீவிர முயற்சியால் இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர்களது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் எட்டு பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
 

More News

நடிகர் விஜய் வீட்டில் திடீரென நுழைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள்? பரபரப்பு தகவல்

தளபதி விஜய் வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தெரிந்ததே

நடு ரோட்டில் போலீஸ் தடுப்பை பயன்படுத்தி வாலிபால் விளையாடிய வாலிபர்கள் கைது

தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அவசியத் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரும் நபர்களுக்கு

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா: புதியதாக 5 பேர் பலி

சீனாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வூகான் என்ற மாகாணத்தில் கொரோனா வைரஸ் உருவாகி பரவ ஆரம்பித்தது

காவல்துறைக்கு விஜய் ரசிகர்கள் செய்த உதவி: நன்றி கூறிய துணை கமிஷனர்

தமிழகத்திலும் சரி, நமது அண்டை மாநிலங்களாக இருந்தாலும் சரி, இயற்கை பேரிடர் நேரிடும் போதெல்லாம் முதல் ஆளாக களத்தில் இறங்கி சமூக சேவை செய்து வருபவர்கள் தளபதி விஜய்யின் ரசிகர்கள்

வருத்தப்பட்ட காதலிக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஷ்ணு விஷால்

இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருவதை அடுத்து இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் தற்போது வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.