நவம்பரில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு! காலாண்டு அரையாண்டு தேர்வுகள் ரத்தா?

  • IndiaGlitz, [Friday,August 07 2020]

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பதும் பத்தாம் வகுப்பு உள்பட அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தமிழகத்தில் 2020-21 கல்வியாண்டுக்காக பள்ளிகளை எப்போது திறக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை பெற்றோரிடம் கருத்துக் கேட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளை வரும் நவம்பர் மாதம் திறக்க பள்ளிக்கல்விதுறை திட்டமிட்டுள்ளதாக வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

முதல்கட்டமாக 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதன் பின்னர் படிப்படியாக மற்ற வகுப்புகளுக்கு திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு காலை மற்றும் பிற்பகலில் சுழற்சி முறையில் இரண்டு வகுப்புகளை நடத்தவும் பள்ளி கல்வித்துறை ஆலோசனை செய்து வருகிறது

இந்த நிலையில் நவம்பர் மாதமே பள்ளிகள் திறக்கப்படும் என்பதால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்றும் மார்ச் மாதத்திற்குப் பின்னர் நேரடியாக முழு ஆண்டு பொதுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாகவும் பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

ஊரடங்கு நேரத்தில் அக்சயகுமார் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற தமிழ் நடிகர்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதும் திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் கார்த்தி அல்லது சூர்யா? பரபரப்பு தகவல்

மாநகரம், கைதி ஆகிய இரண்டு வெற்றி படங்களை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

ரஜினி இல்லாமலேயே ஆரம்பமாகும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு?  பரபரப்பு தகவல் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'அண்ணாத்த'.

பிரபல நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை: கடிதத்தில் கூறப்பட்ட அதிர்ச்சி காரணம்

மனச்சோர்வு உள்பட பல்வேறு காரணங்களால் நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.

பெய்ரூட் வெடிவிபத்து: போட்டோவுக்கு போஸ் கொடுத்த மணமகள் பதறி ஓடிய வீடியோ வைரல்

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் என்ற நகரில் சமீபத்தில் அமோனியம் நைட்ரேட் இருப்பு வைக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.