பிகில் இசை வெளியீட்டு விழா: விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய தமிழக அரசு

  • IndiaGlitz, [Tuesday,September 24 2019]

விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் பேசிய ஒரு சில கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகி, அதற்கு அதிமுக அமைச்சர்களும் பாஜகவினர் ஒரு சிலரும் விளக்கம் கொடுத்து வந்தனர்

’பிகில்’ இசை நிகழ்ச்சி முடிவடைந்து மூன்று நாட்கள் ஆகியும், விஜய் பேசிய பேச்சு சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வைரல் ஆகி வந்தது. இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவிற்கு எதன் அடிப்படையில் தனியார் பொறியியல் கல்லூரி அனுமதி கொடுத்தது என்று உயர்கல்வித்துறை செயலாளர் அதிரடியாக கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த நோட்டீசுக்கு அந்த கல்லூரி நிர்வாகம் விரைவில் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது