தமிழகத்தில் இன்று 43 பேர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்: சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1520ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் இவர்களில் ஒருவர் மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இருவரையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 6109 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், மொத்தம் 41,710 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதேபோல் இன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 46 என்றும் இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 457 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சி தகவல்

கொரோனா பாதிப்பு குறித்த செய்திகளை சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்கள் மற்றும் போட்டோகிராபர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கி வருவது குறித்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஒரு மருத்துவருக்கே இந்த நிலையா? நடிகர் விவேக்கின் உருக்கமான வீடியோ

கொரோனாவால் இறந்தது ஒரு மருத்துவராக கூட இருந்தால் கூட அவருடைய உடலை அடக்கம் செய்ய முடியாத சூழ்நிலைக்கு உள்ளாகி ரொம்ப வருத்தமாக உள்ளது. சைமன் என்ற நியூரோ சர்ஜன், இன்று கொரோனாவால் உயிரிழந்தார்

கொரோனா விடுமுறையில் பிரம்மாண்ட இயக்குனரின் பிரமாத செயல்  

இந்த கொரோனா விடுமுறையில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் விதவிதமான வீடியோக்களை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன

உலகம் முழுவதும் ஆபத்தில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள்!!! WHO விதிமுறைகள்!!!

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு மத்தியில் கடுமையான பாதிப்புகளை உலகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் அனுபவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மார்ச் 24-ம் தேதி முதல்கட்ட ஊரடங்கும், ஏப்ரல் 15ஆம் தேதி இரண்டாம் கட்ட ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது