close
Choose your channels

இன்று '96' திரைப்படத்திற்கு ஒரு விசேஷமான நாள்!

Monday, January 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கிய '96' திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வெளியானது. இந்த படம் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது மட்டுமின்றி வசூல் அளவிலும் பெரிய வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக விஜய்சேதுபதியும், த்ரிஷாவும் ராம்-ஜானு கேரக்டரில் வாழ்ந்து படத்திற்கு உயிர் கொடுத்தனர்.

பெரிய பட்ஜெட் படங்கள், பிரமாண்டமான படங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்று வந்து கொண்டிருக்கும் '96' திரைப்படம் இன்று 96வது நாள் என்ற மைல்கல்லை தொட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக ஒரு திரைப்படம் பத்து நாட்கள் ஓடுவதே அரிதிலும் அரிதான நிகழ்வாக உள்ள நிலையில் இந்த படம் 96வது நாளை தொட்டுள்ளது படக்குழுவினர்களுக்கு பெருமையான ஒரு விஷயம் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த நிலையில் '96' திரைப்படம் இன்று 96வது நாளை எட்டியநிலையில் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் '96th Day of 96' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.