close
Choose your channels

இயக்குனர் சங்க தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

Sunday, July 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கான தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் சற்றுமுன் வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த தேர்தலில் இயக்குனர் சங்கத்தின் தலைவர், துணைத்தலைவர், இணைச்செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆகியோர்களை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடைபெற்று வருகிறது. இயக்குனர் சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு ஏற்கனவே இருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை வாக்குப்பதிவு முடிந்தவுடன் இரவுக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்த இயக்குனர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் கூறியபோது, 'பாரதிராஜா இயக்குனர் சங்க தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று சொல்வது தவறான தகவல். அனைத்து உறுப்பினர்களுக்கும் தகவல் தரப்பட்டு, அதன் பின்னரே அவர் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். மேலும் அடுத்த ஆண்டு இயக்குநர் சங்க பொன்விழா நடைபெற உள்ள நிலையில், பாரதிராஜா தலைவராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம் என்று ஆர்.கே. செல்வமணி தெரிவித்தார்.

இயக்குனர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.