இன்று அடுத்தடுத்து ஐந்து அப்டேட்கள்: சினிமா ரசிகர்களுக்கு செம குஷி!

  • IndiaGlitz, [Wednesday,July 06 2022]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இரண்டு ஆண்டுகளாக முடங்கியிருந்த திரையுலகம் தற்போது மீண்டும் புத்துணர்ச்சி பெற்று அதிக திரைப்படங்களை ரிலீஸ் செய்து வருகிறது. மேலும் பல திரைப்படங்கள் நல்ல வசூலையும் பெற்று இருப்பதால் திரையுலகினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த நிலையில் திரையுலக ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் இன்று ஐந்து அப்டேட்கள் அடுத்தடுத்து வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்று மதியம் 12 மணிக்கு ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ஒரு சில போஸ்டர்கள் வெளியாகி நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரிந்ததே..

அதேபோல் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ’டிரைவர் ஜமுனா’ என்ற திரைப்படத்தின் டிரைலர் இன்று 05.15 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளார்.

மேலும் ஓவியா மற்றும் யோகி பாபு நடிக்கும் படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 05.30 மணிக்கு வெளியாக உள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஓவியாவின் ரசிகர்களுக்கு ஒரு செம அப்டேட் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’தி வாரியர்’ என்ற திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற உள்ளது. அதனை அடுத்து ஒரு பாடலையும் படக்குழுவினர் வெளியிடவுள்ளனர்.

மேலும் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியாக உள்ளது. எனவே பல பிரபலங்கள் பணிபுரிந்த படங்களின் அப்டேட்கள் இன்று ஒரே நாளில் வெளியாக உள்ளதை அடுத்து சினிமா ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

More News

ஒருநாள் இவர் வெற்றிகரமான இயக்குனர் ஆவார்: அனிருத் பாராட்டிய நபர் யார் தெரியுமா?

'பொறுத்திருந்து பாருங்கள், இவர் ஒரு நாள் நிச்சயம் வெற்றிகரமான இயக்குனர் ஆவார்' என அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் 'விக்ரம்' பட உதவி இயக்குனர் ஒருவரை பாராட்டியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி

மீண்டும் பிரமாண்டம்: ஷங்கர் இயக்கிய பாடலில் இத்தனை நடனக்கலைஞர்களா?

தமிழ் திரையுலகை பொறுத்தவரை ஷங்கர் என்றால் பிரமாண்டம், பிரமாண்டம் என்றால் ஷங்கர் என்று தான் கூறபட்டு வருகிறது. குறிப்பாக அவரது படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும்

விஜய்சேதுபதியா? வில்லன் சேதுபதியா? மேலும் இரண்டு பிரபலங்களின் படத்தில் வில்லன்?

நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

'ராக்கெட்டரி' படத்தில் பணிபுரிந்த கே.பாலசந்தர் பட நடிகை: இவருடைய பாட்டியும் நடிகைதான்!

நடிகர் மாதவன் நடித்து தயாரித்து இயக்கிய 'ராக்கெட்டரி' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் பழம்பெரும் நடிகை ஒருவரின் பேத்தியும், கே பாலச்சந்தர்

வேஷ்டி காஸ்ட்யூம், செம லுக்கில் மாளவிகா மோகனன்: வைரல் புகைப்படம்!

தளபதி விஜய்யுடன் 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகனன் வேஷ்டி காஸ்ட்யூமில் செம லுக்கில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் அந்த பதிவு வைரலாகி வருகிறது.