close
Choose your channels

இன்று ஆயுதபூஜையை முன்னிட்டு 4 திரைப்படங்களின் முக்கிய அறிவிப்புகள்

Monday, October 7, 2019 • தமிழ் Comments

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஆயுத பூஜை என்பது ஒரு முக்கிய திருவிழாவாக கருதப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு நான்கு திரைப்படங்களின் முக்கிய அறிவிப்புகள், புரோமோஷன்கள் வெளியாக உள்ளன.

முதலாவதாக கார்த்தி நடித்த ’கைதி’ திரைப்படத்தின் டிரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளது. வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் எழிலின் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

மேலும் பிரபுதேவா நடிப்பில் உருவாக உள்ள அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ’மீசையை முறுக்கு’ மற்றும் ’நட்பே துணை’ ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த பிரபல இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் மூன்றாவது திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்துக்கு ’நான் சிரித்தால்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சுந்தர்சியின் அவ்னி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz