வரலாற்றில் இன்று மே 16


Send us your feedback to audioarticles@vaarta.com


1975 மே 16-
ஜப்பானின் புகுஷிமா மாகாணத்தின் மிஹாருவில் பிறந்த ஜுன்கோ தபய் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்தார். சர் எட்மண்ட் ஹிலரி, டென்ஸிங் நோர்கே இருவரும் முதல்முதலாக எவெரெஸ்டில் ஏறி 22 ஆண்டுகளுக்குப் பிறகு, எவரெஸ்டில் ஏறிய பெண்மணி இவர் தான்.
பட்டது.
1966, மே 16-
இது சீனாவில் மிக முக்கியமான நாட்களில் ஒன்று. மாவோ செதாங்கினால் தொடங்கப் பட்ட அரசியல் பிரச்சாரத்தை நாடு கண்ட நாள். இந்த பிரச்சாரத்தின் பிரதன குறிக்கோள் முதலாளித்துவத்தையும், சீன சமுதாயத்தின் பல பாரம்பரிய அம்சங்களையும் நீக்கி, கம்யூனிஸத்தை வேரூன்ற செய்வது தான்.
1929 மே 16-
முதல்முறையாக ஆஸ்கர் விருதுகள் வழங்கப் பட்டன.
லாஸ் ஏஞ்சல்ஸில் ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் சுமார் 270 பேர் பங்கேற்ற விருந்தில் முதல்முதலாக இந்த விருதுகள் வழங்கப் பட்டன. இன்று, இது தான் உலகின் மிக முக்கியமான திரையுலக விருதுகள் வழங்கும் விழா. பல்லாண்டு பாரம்பரியமிக்க ஆஸ்கர் விருதுகள் ஒவ்வொரு வருடமும் திரையுலகில் சிறந்த கலைஞர்களுக்காக அளிக்கப்படுகின்றன.
1985 மே 16
முதல்முதலால வளிமண்டலத்தில் தெந்துருவத்திற்கு மேல் வளிமண்டலத்தில் ஓசோன் துளை இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. பிரிட்டிஷ் அண்டார்க்டிக் சர்வேயைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகள் “நேச்சர்” என்ற அறிவியல் சஞ்சிகையில் தென் துருவத்திற்கு மேல் ஓசோன் அடுக்கில் அசாதாரணமான விதத்தில் ஓசோன் மூலக்கூறுகளின் அளவு அதிகளவில் குறைந்திருப்பதாக வும், இது தீமைவிளைவிக்கும் புறஊதாக் கதிர்களை அதிகளவில் ஈர்க்கும் என்றும், இதற்கு மனிதர்கள் பயன்படுத்தும் பலவகை வேதிபொருட்களே காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
1920 மே 16
ஃப்ரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோன் ஆஃப் ஆர்க்-க்கு போப் பதினைந்தாம் பெனடிக்ட் அவர்கள் புனிதர் பட்டம் வழங்கினார். கி.பி 1412 ல் பிறந்த இவர் பகைவர்களை நாட்டை விட்டு துரத்த தாம் கடவுளால் அழைக்கப்பட்டதாக உணர்ந்து ப்ரெஞ்சு நாட்டு வீரர்களை வழிநடத்தி வெற்றி பெற்ற பின், 19ஆம் வயதில் அவரை சூனியக்காரி என்று குற்றஞ்சாட்டி கொன்றது ஒரு கூட்டம். பின்னர் 25 வருடங்களுக்கு குற்றமற்றவர் என்று தீர்க்கப்பட்டு, ஆறு நூற்றாண்டுகளுக்குப் பிறகு புனிதர் பட்டமும் அளிக்கப் பட்டது.
1792 மே 16-
டென்மார்க்கில் அடிமைவியாபாரம் அழிக்கப் பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Rhea Dhanya
Contact at support@indiaglitz.com