அரசியல் சூரியனில் ஆழம் பதித்த கலைஞர் கருணாநிதியின் நினைவுதினம் இன்று…

50 வருடத்திற்கும் மேலாக திமுக கழகத்தைக் கட்டிக் காத்தவர், 5 முறை தமிழக முதலச்சராகப் பதவி வகித்தவர், தான் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிப்பெற்றவர், எல்லாவற்றிற்கும் மேலாக “என் உயிரினும் மேலான எனதன்பு உடன்பிறப்புகளே” என்று தமிழ் நாட்டு மக்களின் இதயங்களில் ஆட்சி செய்தவர் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி.

ஓயாது உழைத்து தமிழக மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். பெரியார், அண்ணா கொள்கைகளை தமிழக மக்கள் மத்தியிலும் தமிழக அரசியல் மட்டத்திலும் புகுத்தியவர். கலைஞரின் இந்த செயலால் மற்றக் கட்சிகளும் அவரது கொள்கைகளை பின்பற்ற வேண்டியிருந்தது. “வடக்கின் வாழ்க்கையை தெற்குத்தான் தீர்மானிக்கும்“ என்பதில் உறுதியாக இருந்தவர்.

கடந்த 1924 ஆம் ஆண்டு ஜுன் 3 ஆம் தேதி தட்சிணாமூர்த்தியாகப் பிறந்து கருணாநிதியாக மாற்றம்பெற்று பின்னர் மக்கள் மத்தியில் கலைஞர் எனப் போற்றப்பட்டவர்.

அரசியல் மட்டுமல்லாது பத்திரிக்கை, இலக்கியம், சினிமா, தமிழ்ப்பற்று என இவருடைய எல்லை பரந்து கொண்டே செல்கிறது. தமிழக அரசியலில் சமூகநீதி கொள்கைக்கு உயிர்க் கொடுத்தவர். பேசிக்கொண்டே இருக்கும் தலைவர்களுக்கு மத்தியில் அனைத்து சமூக நீதியையும் திட்டமாகக் கொண்டு வந்தவர்.

தமிழக அரசியல் பாதையில் தேர்தல் வாக்குறுதி என்ற புதிய யுத்தியை புகுத்தியவர். இவர் கொடுக்கும் வாக்குறுதிகள் பொதுப்படையாகத் தெரிந்தாலும் பின்னாட்களில் கொள்கைக்கு பாதகம் இல்லாமல் அனைத்தும் செய்துவிட்ட வித்தைக்காரன்.

தமிழகத்தின் தனியுரிமைக்காக தனது வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்தவர். ஒயாத பேச்சாலும் எழுத்தாலும் தமிழகத்திற்கு எண்ணற்றத் திட்டங்களைக் கொண்டுவந்தவர்.

அரசியல் சூரியனில் ஆழம் பதித்தவர். ஓயாத உழைப்பால் ஒப்பற்ற தமிழகத்தை படைக்க விரும்பியவர். எண்ணற்ற எதிர்ப்புக்கு மத்தியில் எழு சூரியனாய் தொடர்ந்து பயணித்த கலைஞர் கருணாநிதியின் 3 ஆம் ஆண்டு நினைவுத் தினம் இன்று.

அவருடைய நினைவு நாளில் திமுக தொண்டர்கள், கழகத் தலைவர்கள், பொறுப்பாளர்கள் அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கூடவே பகுத்தறிவுக்கு பங்கம் இல்லாமல், சமூக நீதிக்கு சாதகமாக பயணித்த அவருடைய செயல்களுக்காகவும் அரசியல் நிலைப்பாட்டுக்காகவும் மக்கள் அனைவரும் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

More News

லாரி டிரைவர்களுக்கு விருந்து வைத்த ஒலிம்பிக் வீராங்கனை… கண்ணீர் சிந்த வைக்கும் காரணம்!

டோக்கியோ ஒலிம்பிக் 2021 இல் இந்தியாவிற்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு.

தலைகீழாக நின்று யோகா செய்யும் அஜித் படத்தில் அறிமுகமான நடிகை!

அஜித் படத்தில் அறிமுகமான நடிகை ஒருவர் தலைகீழாக நின்று யோகா செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 

டிஸ்சார்ஜ் ஆகிட்டேன், ஆனா வீட்டுக்கு இன்னும் போகலை: யாஷிகா

நடிகை யாஷிகா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கினார் என்பதும் அதில் அவரது உயிர்த்தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் என்பதும் தெரிந்ததே.

15 வருடங்களுக்கு முன் முதன்முதலில்... இயக்குனர் வெங்கட்பிரபுவின் மலரும் நினைவுகள்!

15 வருடங்களுக்கு முன் முதன்முதலாக தான் இயக்குனர் ஆகி 'ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்' என்று கூறியதன் மலரும் நினைவுகளை இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

நடிகை 'நல்லெண்ணெய்' சித்ராவுக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரல் புகைப்படம்

80களில் அறிமுகமாகி 90களில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை சித்ரா. இவர் 'நல்லெண்ணெய்' விளம்பரத்தில் நடித்து புகழ் பெற்றதால் இவருக்கு 'நல்லெண்ணெய்' சித்ரா என்ற பெயரில் சினிமா வட்டாரத்தில் ஏற்பட்டது.